Co Co

நயன்தாரா நடிப்பில் அறிமுக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் லைகா புரோடக்சன் தயாரிப்பில் ரெடியாகியுள்ள படம் கோலமாவு கோகிலா. இது டார்க் ஜானர் காமெடி படம் என்பது ப்ரோமஷன்கள் வாயிலாகவே தெரிந்துவிட்டது.

coco movie
co co

முழு முழுக்க நயன்தாராவை நம்பி களம் இறங்கியுள்ளார் இயக்குனர் நெல்சன். நெல்சன் பற்றி ஒரு பிளாஷ் பேக் நாம் இங்கு பார்ப்பது மிகவும் அவசியம்.
சிம்புவை வைத்து “வேட்டை மன்னன்” ஆரம்பித்தவர். அப்படத்திற்கு பின் இப்பொழுது அன்பான இயக்குனர் விக்னேஷ் சிவனின் உதவியால் கிடைத்த வாய்ப்பு. அதனை பயன்படுத்தி சாதித்தாரா இல்லை நம்மை சோதித்தாரா என்று பார்ப்போம்.

கதை

அடித்தட்டுக்கு கீழ் வாழும் பக்கா சென்னை குடும்பம். ஷோ ரூம் சேல்ஸ் கேர்ள் வேலையில் நயன்தாரா. செக்யூரிட்டி வேலை பார்க்கும் அப்பா. காலேஜ் படிக்கும் தங்கை. கான்சரில் தவிக்கும் அம்மா.

தன் உடலை வைத்து அம்மாவின் டிரீட்மென்டுக்கு பணம் சாம்பாரைப்பதை விட, போதை பொருள் கடத்தி சம்பாரிக்கலாம் என்ற முடிவை எடுக்கிறார் நம்  கோகிலா. அவர் சந்திக்கும் அண்டர் கிரௌண்ட் நபர்கள், போலீஸ் என்ற நகர்கிறது கதை. கடைசியில் அந்த கும்பலின் பிடியில் இருந்து தப்பித்தாரா, போலீசிடம் சிக்கினாரா என்பது தான் மீதி கதை.

co co
பிளஸ்

நயன்தாரா, யோகிபாபு , சரண்யா பொன்வண்ணன், அனிருத், நெல்சனின் வசனங்கள்

மைனஸ்

ஸ்லோவ் செகண்ட் ஹாப்

சினிமாபேட்டை அலசல்

முதல் முறையாக நயன்தாராவுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட கதை இது. தன் பணியை சிறப்பாக செய்துள்ளார் நயன். அதிகம் இல்லாத மேக் அப், ஒரே ஹேர் ஸ்டைல், டீ ஷர்ட் கவுன் என்ற சகிரீனில் இவர் மட்டுமே நம்மை கவர்கிறார். அப்பாவி பெண்ணாக கடத்தல் உலகத்தில் புகுந்து, பின் தன் தற்காப்புக்காக லாஜிக் யோசித்து செயல்படுவது மாஸ் ரகம். இன்டெர்வல் பிளாக் காட்சியமைப்பு அருமை.

யோகிபாபு காமெடியில் அசத்துகிறார். வழக்கம் போல சரண்யா பொன்வண்ணன் அப்பாவி அம்மவாக ஆர்மபித்து பின்னர் உயிர் வாழ அவர் செய்யும் அதிரடி உச்சம். இரண்டு அசத்தல் நடிகைகளுக்கு மத்தியில் ஜாக்லினும் சூப்பர் ஆக தன் பணியை செய்கிறார்.

சினிமா பேட்டை வெர்டிக்ட்

ko ko

படம் போர் அடிக்காமல் சென்றாலும், கதை எங்கும் பெரிதாக நகராமல் இருப்பது போலவே தோன்றுகிறது. அனிருத் பின்னணி இசை சூப்பர் தான் என்றாலும் மனிதர் தங்கமாக காப்பி அடிப்பதை தவிர்க்கலாம் .(தோட்டாக்கள் பாடல் அப்படியே ஷாஹித் கபூரின் உட்தா பஞ்சாப் இன் அப்பட்ட காப்பி பேஸ்ட் வகையறா) . சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு படத்துக்கு சூப்பர் பிளஸ். நிர்மலின் எடிட்டிங் கனகச்சிதம்.

சினிமாபேட்டை காமெண்ட்ஸ்

கதைக்காக நயன்தாராவை தேர்வு செய்தனர் படம் ஹிட் ஆனது. இந்நிலையில் முதல் முறை நயன்தாராவுக்காக கதை ரெடி செய்துள்ளனர் இதுவும் ஹிட் என்றே சொல்லலாம். அறம் போன்ற படத்துக்கு பின் சிறப்பான படத்தை தேர்வு செய்துள்ளார் நயன். இப்படியே போகும் பட்சத்தில் வயதானாலும் ஹாலிவுட் ஹீரோயின்கள் போல் நிலைத்து விடுவார் என்றே தோன்றுகிறது.

சினிமாபேட்டை ரேட்டிங் – 3 / 5