Videos | வீடியோக்கள்
வைரலாகுது ராட்சசன் போலவே அட்டகாசமாக இருக்கும் விஜய் ஆண்டனியின் கொலைகாரன் தீம் ம்யூசிக்.
விஜய் ஆண்டனி இசையமைத்து நடித்துள்ள கொலைகாரன் படத்தின் தீம் ம்யூசிக் நேற்று வெளியானது.
கொலைகாரன் படத்தை விஜய் ஆண்டனின் நண்பரும், அவருடன் படித்தவருமான ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ளார் . இவர் இதற்கு முன் “லீலை” என்ற ஸ்டைலிஷ் ரொமான்டிக் படத்தை இயக்கியவர்.
இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடிக்கிறார். அஷிமா நர்வால் , சீதா, நாசர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை விஜய் ஆண்டனியின் நண்பர் பிரதீப் தயாரிக்கிறார்.

flp
நேற்று கொலைகாரன் தீம் இசை வெளியானது. சமீபத்தில் ஜிப்ரான் இசையில் உருவான ராட்சசன் தீம் போலவே உள்ளதாக நம் நெட்டிசன்கள் கருத்தை பகிர்ந்துள்ளனர்.
