Connect with us

Cinemapettai

தரமான இன்வெஸ்டிகேஷன் திரில்லர் கொலைகாரன் திரைவிமர்சனம்.

Reviews | விமர்சனங்கள்

தரமான இன்வெஸ்டிகேஷன் திரில்லர் கொலைகாரன் திரைவிமர்சனம்.

விஜய் ஆண்டனி – ஆக்ஷன் கிங் அர்ஜுன் இணையும் கொலைகாரன் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது .

இப்படத்தை ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ளார் . (“லீலை” என்ற ஸ்டைலிஷ் ரொமான்டிக் படத்தை இயக்கியவர்.)

தான் உண்டு தன் வேலை என இருக்கிறார் விஜய் ஆண்டனி. எதிர் வீட்டில் அம்மா மகள் வசித்து வருகிறார்கள். நடந்த கொலை ஒன்றை துப்பறிகிறார் அர்ஜுன். கொலையான நபருக்கும், ஹீரோயினுக்கும் உள்ள தொடர்பை எளிதில் கண்டுபிடித்து விடுகிறார் அர்ஜுன்.

எனினும் ஏன் விஜய் ஆண்டனி அந்த கொலையையை மறைக்க உதவுகிறார், பின்னர் ஏன் தானே பழியை ஏற்கிறார், என பல குழப்பங்கள் அர்ஜுனுக்கு மட்டுமல்ல படம் பார்க்கும் நமக்கும் தான்.

ஆனால் இறுதியில் படம் முடியும் தருவாயில் அணைத்து முடிச்சுகளும் அவிழும் பொழுது அப்பாடா என கேஸை முடித்த திருப்த்தி, நமக்கு வர வைத்துவிட்டது படக்குழு.

பிளஸ் அர்ஜுன், சைமன் கே கிங்கின் இசை, திரைக்கதை .

மைனஸ் தேவையில்லா பாடல்கள், சுமாராக சித்தரிக்கப்பட்ட விஜய் ஆண்டனி பிளாஷ் பேக்.

வெர்டிக்ட் suspect x என்ற ஜப்பானிய மொழி படத்தின் ரிமேக் என்ற நினைப்பில் தான் நாம் சென்றோம். எனினும் இது மையக்கதையை வைத்து எடுக்கப்பட்ட தழுவல் . இப்படத்தை ரிமேக் செய்தால் A சென்டர் மட்டுமே ரீச் ஆகும், ஆனால் அழகான மாறுதல்களை செய்து பி மற்றும் சி சென்டருக்கு புரியும்படி எடுத்த இயக்குனருக்கு ஸ்பெஷல் க்ளாப்ஸ்.

சினிமாபேட்டை ரேட்டிங் 2.75 / 5

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top