கோலிக்கு நடராஜனிடன் பிடித்த மூன்று விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

தமிழகத்தைச் சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சளர் நடராஜன். ஐபிஎல் 2020 இல் ஹைதெராபாத் டீமுக்காக சிறப்பாக செயல்பட யார்கர் நடராஜன் என பிரபலமானார். ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியின் நெட் பௌளராக சேர்க்கப்பட்டார். எனினும் வருண் மற்றும் சைனிக்கு ஏற்பட்ட காயம் காரணமாக டி 20 மற்றும் ஒரு நாள் போட்டிக்கான டீம்மில் இடம் கிடைத்தது.

கிடைத்த வாய்ப்பை அழகாக பயன் படுத்தி வீரர்கள், வர்ணனையாளர்கள், ரசிகர்கள் என அனைவரது பாராட்டையும், ஆதரவையும் பெற்றுள்ளார். யார்கர் மட்டுமல்ல ஸ்லோ பால், கட்டர், பௌன்சர் என அசத்திவிட்டார் மனிதர். 3 டி 20 போட்டிகளில் ஏழுக்கு குறைவாக ரன்களை கொடுத்து, 6 விக்கெட்டுகளை வீழ்த்தி கேப்டன் கோலியின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார் நட்டு.

“ஷமி மற்றும் பும்ரா இல்லாத நேரத்தில், இவர் சிறப்பாக செயல்பட்டார். அழுத்தம் அதிகம் இருந்தும் நன்றாக விளையாடி உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் சில போட்டிகளில் அவர் செயல்பட்ட விதம் கவனிக்க வேண்டிய ஒன்று, மேலும் பதட்டம் இல்லாமல் அமைதியாக இருந்தார்.

மேட்ச் சூழலில் தான் என்ன செய்ய வேண்டும் என தெளிவான நோக்குடன் இருந்தார், கடினமாக உழைக்க கூடியவர், தன்னடக்கம் உள்ள நபர். இது போன்ற டீமுக்காக அற்பணித்து, கடினமாக உழைக்கும் வீரர்களுக்கு நல்ல பலன் கிடைத்து, அவர்கள் டீம்மையும் வெற்றிக்கு அழைத்து செல்லும் பொழுது,  சந்தோசம்  தானாக வருகின்றது.

அவருக்கு நான் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன். மேலும் அவர் கடினமாக உழைத்து, இன்னும் சிறப்பான வீரராக தயாராக வேண்டும். இடது கை பௌலர் டீமுக்கு என்று நல்ல பலம் தான். இதேபோல தொடர்ந்து சிறப்பாக வீசும் பட்சத்தில் அடுத்த வருட உலகக்கோப்பைக்கு நல்ல வீரராக அமைவார்.” என சொல்லியுள்ளார்.

வாழ்த்துக்கள் நடராஜன் சினிமாபேட்டை சார்பிலும்.

Natarajan-cinemapettai1.jpg
Natarajan-cinemapettai1.jpg