லண்டன்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது போல மற்ற அணிகளை வீழ்த்த ரெடியாக உள்ளதாக இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.

இதில் பர்மிங்ஹாமில் நடந்த ‘பி’ பிரிவு நான்காவது லீக் போட்டியில், இந்தியா அணி, தனது பரம எதிரியான பாகிஸ்தான் அணியை 124 ரன்கள் வித்தியாசத்தில் மரண அடி அடித்து மெகா வெற்றியை பதிவு செய்தது. இதேபோல சாம்பியன்ஸ் டிராபி மற்ற போட்டிகளிலும் வெற்றி பெற தயாராக் இருப்பதாக இந்திய கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.

இது குறித்து விராட் கோலி கூறுகையில்,’ இந்த தொடரின் எல்லா போட்டியுமே முக்கியத்துவமானது தான். பாகிஸ்தான் அணிக்கு எதிரான வெற்றி ஒரு அணியாக அனைவருக்கும் கிடைத்த வெற்றி. இந்த வெற்றியை அப்படியே எல்லா அணிக்கு எதிராகவும் செயல்படுத்துவோம். ‘ என்றார்.