fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

F**K – கெட்ட வார்த்தையில் திட்டிய விராட் கோலி.. ஆணவத்தின் உச்சம்.. பரபரப்பு வீடியோ

kholi

Sports | விளையாட்டு

F**K – கெட்ட வார்த்தையில் திட்டிய விராட் கோலி.. ஆணவத்தின் உச்சம்.. பரபரப்பு வீடியோ

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான இரண்டாம் டெஸ்ட் போட்டியில் படுதோல்வி அடைந்தது இந்தியா. இதற்கு பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடவில்லை என்று தன்னையும் சேர்த்து கோலி கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது. குறைந்தபட்ச ரன்கள் எடுத்து இந்தியா படுதோல்வி அடைந்தது ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

போட்டியின் நடுவில் சமியின் அற்புதமான பந்தில் டோம் லதாம் அவுட் ஆனபோது ரசிகர்கள் கூச்சலிட்டு விராட் கோலியை வெறுப்பு ஏற்றினர்.  இதனால் கோபமடைந்த கோலி அவர்களை கெட்ட வார்த்தையால் திட்டியதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

‘Shut The F**K Up’ என்று திட்டிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அது மட்டுமல்லாமல் தோல்விக்கான காரணத்தை கேட்டபோது போன தடவை என்ன கூறினேன் அதையேதான் இப்போதும் என்று ஒரே பதிலை தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வர வர மாமியார் கழுதை போல போன கதையாக தற்போது கோலியின் நடவடிக்கைகள் ரசிகர்களிடையே மூஞ்சை சுழிக்கும் அளவிற்கு உள்ளதாம். என்னதான் புகழின் உச்சியில் இருந்தாலும் ரசிகர்களை உற்சாகப்படுத்துவது மட்டுமே ஒரு சிறந்த வீரரின் அடையாளம் என்றே கூறலாம்.

இதை தற்போது கோலி இழந்து வருவதாக தெரிகிறது, ஆனால் வரும் ஐ.பி.எல் தொடரில் கோலியின் சிறப்பான ஆட்டம் ரசிகர்களிடம் இருக்கும் இந்த தவறான கருத்துக்களை தும்சம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top