Sports | விளையாட்டு
அவருக்குத்தான் வாய்ப்பு! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய விராத் அண்ட் கோ, அட ஒரு முடிவுக்கு வாங்க சாஸ்திரி!
கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ரோஹித் சர்மாவுக்கு மாற்று வீரரை தயார் செய்து வைத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரோகித் சர்மாவின் காயம் ஓரளவு குணமாகி உள்ள நிலையில், தன் உடற்தகுதியை நிரூபிக்க இந்தியாவில் தங்கி உள்ளார்.அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அந்த அகாடமி சான்றிதழ் அளித்தால் மட்டுமே அவரால் ஆஸ்திரேலியாவில் போட்டிகளில் பங்கேற்க முடியும்.
ரோஹித் இன்னும் நான்கு நாட்களில் தன்னுடைய உடல் தகுதியை நிரூபிக்க வேண்டும்.ஆனால் இப்போது வரை சான்றிதழ் பெறவில்லை எனவும் ,ஆஸ்திரேலிய தொடரில் இருந்து முழுவதுமாக நீக்கப்படுவார் எனவும் தெரிவிக்கின்றனர் .
அதற்குள் கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இருவரும், ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம் பெற்று இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயரை, ரோஹித் சர்மா இடத்தில் ஆட வைப்பதாக முடிவு எடுத்துள்ளனர்.
மேலும் ஸ்ரேயாஸ் ஐயர் அந்த தொடர் முடிந்த பின்னரும் ஆஸ்திரேலியாவிலேயே தங்கி இருப்பார். அவருக்கு டெஸ்ட் தொடருக்கான அணியில் வாய்ப்பு அளிக்கப்படும் என கூறப்படுகிறது.
இது முற்றிலும் ரோஹித் சர்மாவை ஒதுக்குவதற்காக விராத் மட்டும் ரவிசாஸ்திரி எடுத்து முடிவு எனவும், அவருக்கு போதிய அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Rohit-Cinemapettai
