கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணம் அடைந்தார். அவரது சாவில் மர்மம் உள்ளதாக பல்வேறு தரப்பினர் சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். மேலும் சசிகலா குடும்பத்தினர்தான் ஜெயலலிதாவை அடித்து கொன்று விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த நிலையில், ஜெயலலிதாவுக்கு சொந்தமான சொகுசு பங்களா ஊட்டி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில் உள்ளது. இந்த பங்களாவில் காவலாளியாக ஓம் பகதூர், கிஷன் பகதூர் ஆகியோர் இருந்தனர். இவர்களில் ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மற்றொரு காவலாளி கிஷன் பகதூர் படுகாயத்துடன் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜெயலலிதா சாவு குறித்த மர்மங்கள் விலகாத நிலையில் கொடநாடு எஸ்டேட் பங்களா காவலாளி கொலை செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் அவர் ஜெயலலிதா சாவு குறித்த ரகசியங்களை தெரிந்து இருந்ததால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.