சசிகுமாரின் மிரட்டலான அடிதடியில் கொடிவீரன் டீசர்

‘பலே வெள்ளையத் தேவா’ படத்திற்கு பிறகு சசிகுமார் நடிப்பில் தயாராகி வரும் படம் ‘கொடிவீரன்’. இது தவிர கைவசம் இயக்குநர் சீனு ராமசாமியின் புதிய படம் உள்ளது. இதில் ‘கொடிவீரன்’ படத்தை முத்தையா இயக்குகிறார்.

ஏற்கெனவே, சசி – முத்தையா காம்போவில் ரிலீஸான ‘குட்டிப்புலி’ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ‘கொடிவீரன்’-யில் சசிகுமாருக்கு ஜோடியாக ‘சாட்டை’ புகழ் மகிமா நம்பியார் டூயட் பாடி ஆடியுள்ளார்.

இதனை சசிகுமார் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘கம்பெனி புரொடக்ஷன்’ மூலம் தயாரித்து வருகிறார். என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்து வரும் இதற்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கொடிவீரன்’ படத்தில் சசிகுமாரோடு பசுபதி, மஹிமா, சனுஷா, வித்தார்த், பூர்ணா, பால சரவணன் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர். இந்தப் படத்தின் வில்லனாக, ‘குற்றம் 23’ மற்றும் ‘தடம்’ படத்தின் தயாரிப்பாளரான இந்திரகுமார் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சசிகுமாரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளார், S.R.கதிர்தான் இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.

ரகுநந்தன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ‘கொடிவீரன்’ படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்துவரும் நிலையில், கடந்த மாதம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்நிலையில் விஜயதசமியான இன்று மாலை இத்திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

‘கொடிவீரன்’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படம் ஆயுதபூஜை வெளியீடாக இருந்த நிலையில். பல்வேறு படங்கள் வெளியாவதால், தங்களது வெளியீட்டை தள்ளிவைத்தது.

தற்போது 5 நாள் விடுமுறை என்பதால், தீபாவளி வெளியீடாக திரைக்கு கொண்டுவரலாம் என்று ‘கொடி வீரன்’ படக்குழு முடிவு செய்திருக்கிறது. விரைவில் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியிடுவார்கள் என அறிவித்தது, படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளைத் துவங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

‘கொடிவீரன்’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் சசிகுமார் தான்  வெளியிட்டுள்ளார்.

Sharing Is Caring:

Leave a Comment

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்