fbpx
Connect with us

மிரட்ட வருகிறான் கொடிவீரன் ஆடியோ, டிரையிலர் ரிலீஸ் தேதி தெரியுமா..!!!

sasi

News / செய்திகள்

மிரட்ட வருகிறான் கொடிவீரன் ஆடியோ, டிரையிலர் ரிலீஸ் தேதி தெரியுமா..!!!

‘பலே வெள்ளையத் தேவா’ படத்திற்கு பிறகு சசிகுமார் நடிப்பில் தயாராகி வரும் படம் ‘கொடிவீரன்’. இது தவிர கைவசம் இயக்குநர் சீனு ராமசாமியின் புதிய படம் உள்ளது. இதில் ‘கொடிவீரன்’ படத்தை முத்தையா இயக்குகிறார். ஏற்கெனவே, சசி – முத்தையா காம்போவில் ரிலீஸான ‘குட்டிப்புலி’ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

‘கொடிவீரன்’-யில் சசிகுமாருக்கு ஜோடியாக ‘சாட்டை’ புகழ் மகிமா நம்பியார் டூயட் பாடி ஆடியுள்ளார்.மற்றுமொரு நாயகியாக ‘கந்தகோட்டை’ பூர்ணா நடித்துள்ளார். மேலும், ‘மைனா’ விதார்த், சனுஷா, பாலசரவணன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சசிகுமாருக்கு எதிராக மோதும் மிரட்டலான வில்லன் வேடத்தில் தயாரிப்பாளர் இந்தர் குமார் நடித்துள்ளார். இதனை சசிகுமார் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘கம்பெனி புரொடக்ஷன்’ மூலம் தயாரித்து வருகிறார். என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்து வரும் இதற்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறதாம். சமீபத்தில், படக்குழுவால் டிவிட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் மற்றும் ‘அய்யோ அடி ஆத்தே’ எனும் சிங்கிள் டிராக் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது. தற்போது, அனைத்து பாடல்கள் மற்றும் டிரையிலரை வருகிற செப்டெம்பர் 29-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். படத்தை தீபாவளி ரேஸில் களமிறக்கவுள்ளனராம்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top