நவம்பர் 30-ம் தேதி வெளியீடு என்று சசிகுமார் நடிப்பில் உருவான ‘கொடிவீரன்’ படத்தை விளம்பரப்படுத்தி வந்தார்கள். இதனிடையே கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு மேற்பார்வையாளரான அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டார்.

kodiveeran

பைனான்சியர் அன்புசெழியன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தனது கடிதத்தில் அவர் எழுதி வைத்திருந்ததால், அது திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ‘கொடிவீரன்’ திரைப்படம் சிக்கலின்றி வெளிவருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பைனான்சியர் அன்புசெழியன் தனக்கு வர வேண்டிய கடன் தொகைக்காக, லேப்பில் ‘கொடிவீரன்’ படத்தின் மீது நோட்டீஸ் வைத்திருக்கிறார். தற்போது அவரும் தலைமறைவாகியுள்ளதால், யாருடன் பேச்சுவார்த்தை நடத்தி படத்தை வெளியிடுவது என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

kodiviran

மேலும், வெளியீட்டு சிக்கல் ஏற்படும் விநியோக ஏரியாவில் ‘கொடிவீரன்’ படத்தை தயாரிப்பாளர் சங்கமே வெளியிடவும் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்திருக்கிறார்கள்.

ஆயுதபூஜை வெளியீடு, தீபாவளி வெளியீடு என பலமுறை திட்டமிடப்பட்டு, தற்போது நவம்பர் 30 வெளியீடு என விளம்பரப்படுத்தி வருகிறது படக்குழு. ஆனால், டிசம்பர் 8 வெளியிடலாம் என்று பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகின.

kodiveeran

முத்தையா இயக்கத்தில் சசிகுமார், மஹிமா நம்பியார், சனுஷா, விதார்த், பால சரவணன், பூர்ணா மற்றும் தயாரிப்பாளர் இந்தர்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். கதிர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ரகுநந்தன் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். சசிகுமாரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

சசிகுமாரின் நெருங்கிய உறவினர் மற்றும் இணை தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலை செய்துகொண்டது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

kodiveeran

கொடிவீரன் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பல முறை தள்ளிபோனநிலையில் இந்த வாரம் வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. தற்போது படம் டிசம்பர் 7ம் தேதிக்கு படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்காக வாங்கிய கடன் பற்றிய பிரச்சனையால் தான் தயாரிப்பாளர் அஷோக் குமார் தற்கொலை செய்துகொண்டார் என கடிதத்தில் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பைனான்சியர் அன்புச்செழியன் மீது தயாரிப்பாளர் சி.வி.குமார் கொடுத்த கந்துவட்டி புகாரை தற்போது திரும்பப்பெற்றுள்ளார். அதனால் இனி அன்புச்செழியனை போலீஸ் கைது செய்ய வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.