அரசியல்வாதி மற்றும் ரெளடி என இரண்டு மாறுபட்ட வேடங்களில் தனுஷ் நடித்த ‘கொடி’ படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இறுதிக்கட்ட போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.

வரும் 28ஆம் தேதி தனுஷின் 33வது பிறந்த நாள் வருகிறது. இந்த பிறந்த நாளில் அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் தரும் சிறப்பு பரிசாக அவர் பிறந்த நாள் அன்றே ‘கொடி’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

த்ரிஷா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் தனுஷூக்கு ஜோடியாக நடித்துள்ள இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ‘எதிர்நீச்சல்’ மற்றும் ‘காக்கிச்சட்டை’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தோஷ் நாராயணன் முதல்முறையாக தனுஷ் நடித்துள்ள படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.