Connect with us

Cinemapettai

கொடநாடு காவலாளி கொலை வழக்கில் தேடப்பட்ட சயனின் குழந்தை கழுத்தில் வெட்டுக்காயம்..! கேரள போலீசார் கோவை விரைவு..!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கொடநாடு காவலாளி கொலை வழக்கில் தேடப்பட்ட சயனின் குழந்தை கழுத்தில் வெட்டுக்காயம்..! கேரள போலீசார் கோவை விரைவு..!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்மநபர்கள் உள்ளே புகுந்து அங்கிருந்த காவலாளியை கொலை செய்தனர். இந்த கொலையில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த சயன் குடும்பத்தோடு கேரளா மாநிலம் பாலக்காடு அருகே நடந்த சாலை விபத்தில் சிக்கினான்.

 

கார்விபத்தில் சயன் காயமடைந்து கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் பலியான அவரது மனைவி மற்றும் அவரது மகள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானதால் அவர்களது உடல் திருச்சூர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் பிரேத பரிசோதனையில் குழந்தையின் கழுத்தில் வெட்டுக்காயம் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் திருச்சூர் போலீசார் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சயனிடம் விசாரணை செய்வதற்காக கோவை விரைந்துள்ளனர்.
குழந்தையின் கழுத்தில் வெட்டுக்காயம் ஏற்பட்டது எப்படி? ஒரு வேளை சயனே மனைவி மற்றும் குழந்தையை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொள்வதற்காக காரை விபத்து ஏற்படுத்தினாரா என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொள்வார்கள் என்று தெரிகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top