Connect with us
boomerang-movie

ஜெயலலிதா பங்களாவில் கொள்ளை..! 3 பெட்டிகளில் இருந்தது என்ன? சசிகலாவை விசாரிக்க போலீஸ் திட்டம்!

jaya_cinemaPettai

ஜெயலலிதா பங்களாவில் கொள்ளை..! 3 பெட்டிகளில் இருந்தது என்ன? சசிகலாவை விசாரிக்க போலீஸ் திட்டம்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் கடந்த 24ம் தேதி அதிகாலை கொள்ளை சம்பவம் நடந்தது.

இதில் ஜெயலலிதா அறையில் இருந்த 3 பெட்டிகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். அதில் என்ன இருந்தது என்பதை கண்டுபிடிக்க சசிகலாவிடம் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவத்தை தடுக்கும்போது காவலாளி ஓம்பகதூரை படுகொலை செய்துவிட்டு கொள்ளை கும்பல் தப்பிச்சென்றது.

இந்நிலையில், கொள்ளை நடந்த பங்களாவை போலீசார் ஆய்வு செய்தபோது 3 பெட்டிகள் திறந்து கிடந்ததை உறுதி செய்தனர். அதில் குறிப்பாக இருந்தது என்னென்ன என்பது பற்றி போலிசார் முதலில் தெரிவிக்கவில்லை.

முதலில் காவலாளியின் செல்போன் மட்டும் திருட்டு போனதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் திறந்து கிடந்த பெட்டியில் பலகோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் கட்சியின் ஆவணங்கள் இருந்ததாக தகவல் வெளியாகின. இதனை போலீசார் மறுத்துள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர்கள் வெறும் கைக்கடிகாரங்கள் மட்டுமே எடுத்துச்சென்றதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், பங்களாவில் பணம் இருப்பதாக கருதியே கொள்ளை கும்பல் வந்ததாக போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் பணம் எதுவும் எடுத்துச்செல்லவில்லை கைக்கடிகாரத்தை மட்டுமே எடுத்து சென்றதாக கூறுவது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோடநாடு பங்களாவில் என்னென்ன இருந்தது என்பதெல்லாமே ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவிற்கு மட்டுமே தெரியும். இது தொடர்பாக அவரிடம் விசாரித்தால் மட்டுமே உண்மை வெளியில் வரும் என்று அதிமுக தொண்டர்களும் கோடநாடு மக்களும் தெரிவிக்கின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top