கதை

கோ படத்திற்கும் இந்த படத்திற்கும் சம்மந்தமே இல்லை. ஆனால், டைட்டில் வைத்ததற்காகவே சிறகுகள் கட்சி வீழ்ச்சியடைந்து மீண்டும் பிரகாஷ்ராஜ் முதல்வரானார் என்ற வசனம் வருகின்றது.

அறிமுக இயக்குனர் சரத் இப்படத்தை இயக்கியுள்ளார்.பாபி சிம்ஹா படத்தின் ஆரம்பத்திலேயே தமிழகத்தின் முதலமைச்சர் பிரகாஷ்ராஜை கடத்துகிறார். தமிழகமே பதட்டமாக போலிஸ் படையுடன் பாபி இருக்கும் இடத்தை வந்து சேர்கிறது.

உங்களுக்கு என்ன வேண்டும்? எதற்கு முதலமைச்சரை கடத்துனீர்கள்? என்று கேட்க, பாபி மிகவும் சிறுபிள்ளை தனமாக காரணங்களை சொல்கிறார். அது அரசாங்கத்திற்கு சிறுபிள்ளை தனமாக இருந்தாலும், பெரிய விஷயத்தை சிம்பிளாக பாபி சொல்ல முயற்சிக்கிறார்.

இதை தொடர்ந்து பல திடுக்கிடும் உண்மைகளை பாபி முதலமைச்சரை தன் கட்டுப்பாட்டில் வைத்து வெளிக்கொண்டுவருவதே மீதிக்கதை.

விமர்சனம் 

வசனம், அரசாங்கத்திற்கு சாட்டையடி அதிலும் தேர்தல் நேரத்தில்.படத்தின் இசை, இரண்டாம் பாதி, கருணாகரன் முதன் முதலாக காமெடி தவிர்த்து சிறிது நேரம் வந்தாலும் ஈர்க்கிறார்.

இளவரசு வாயிலாகவே அரசாங்கத்தை பற்றிய கிண்டல் கேளிகளை பாபி சிம்ஹா வெளியே கொண்டு வரும் காட்சி. காமெடியை விட அனைவரும் கவனிக்கவேண்டிய இடம்.

படத்தின் முதல் பாதியில் வரும் தேவையற்ற ப்ளாஷ்பேக் காட்சிகள்.லாஜிக் மீறல்கள், முதலமைச்சரை கடத்துகிறார் என்று கூறும் போதே அத்தனை சீரியஸான விஷயத்தை இன்னும் கொஞ்சம் வேகமாக கொண்டு சென்றிருக்கலாம்.

மொத்தத்தில் இதுவரை சினிமாவில் கூட கேட்க முடியாத சில கேள்விகளை முதன் முறையாக தைரியமாக கேட்டதற்காகவே ஒரு முறை சென்று வரலாம்.

ரைடிங் : 2.5/5