Connect with us
Cinemapettai

Cinemapettai

Sports | விளையாட்டு

கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணியின் புதிய கோச்சாக நியமிக்கப்பட்ட ஸ்டார் பிளேயர் யார் தெரியுமா ?

ஐபில் இல் நம் ஷாருக்கானின் டீம் தான் KKR . கங்குலி, ஆரம்பித்து கம்பிர், தினேஷ் கார்த்திக் வரை வந்துள்ளது இந்த டீம். சில நாட்களுக்கு முன் தலைமை பயிற்சியாளர் ஜாக்ஸ் கல்லிஸ் மற்றும் உதவியாளர் காட்டிச் இருவரின் ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டது டீம் நிர்வாகம். இதில் சைமன் காட்டிச் காரிபியன் பிரீமியர் லீக்கில் ஆடும் ட்ரினிபாகோ நைட் ரெய்டர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் கூட.

இந்நிலையில் முன்னாள் நியூசிலாந்து அணியின் கேப்டன் பிரண்டன் மெக்கலம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சிபில் போட்டிகளில் ஆடும் TKR டீமின் பொறுப்பையும் சேர்த்து கவனிக்கவுள்ளார்.

ஐபில் முதல் சீசனில் கொல்கத்தா அணிக்காக விளையாடிய மெக்கலம், அதிரடியாக ஆடி 158 ரன்கள் விளாசி அசத்தினார். மேலும் ஐந்து ஆண்டுகளாக கொல்கத்தா அணிக்காக விளையாடினார். பின்னர்  சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு ஆடினார்.

37 வயதான மெக்கல்லம் சமீபத்தில் தான் அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற பின் “வர்ணணை மற்றும் பயிற்சியாளராக செய்ல் படப்போவதாக தெரிவித்திருந்தார்.”

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top