பாலிவுட்டுக்கும் கிரிக்கெட்க்கும் எப்பொழுதுமே ஒரு ஸ்பெஷல் கெமிஸ்ட்ரி உண்டு . ஷர்மிளா தாக்குர் – மன்சூர் அலி கான் பட்டோடி, அசாருதீன் – சங்கீதா பிஜிலானி , யுவராஜ் – ஹஸீல் கீச், ஹர்பஜன் – கீதா பஸ்ரா, விராட் – அனுஷ்கா சர்மா, சஹீர்கான் – சகாரிக்கா என லிஸ்ட் நீண்டு கொண்டே தான் போகும். அந்தவகையில் தான் தற்பொழுது ராகுல் – நிதி அகர்வால் பெயரும் கிசு கிசுக்கப்படுகிறது.

கே.எல்.ராகுல்

pandya-rahul

பெங்களூரு பாய். ஸ்டைலிஷ் ஆசாமி. டெஸ்ட் போட்டிகளுக்கு ஏத்தவர் என் இந்திய அணியில் நுழைந்தவர். பின்னர் தன திறமையை நிரூபித்து டி 20 மற்றும் ஒரு நாள் போட்டிகளிலும் அசத்துபவர். மூன்று பார்மட்டில் செஞ்சுரி அடித்தவர். பேட்டிங் மட்டுமன்றி விக்கெட் கீப்பிங் செய்யும் திறனும் உடையவர். இந்த ஐபில் சீசனில் தனி ஆளாக பஞ்சாப் அணிக்காக பேட்டிங்கில் வெளுத்து வாங்கினார்.

நிதி அகர்வால்

Nidhi Agerwal

ஐதராபாத்தில் பிறந்து கர்நாடகாவில் வளர்ந்த நிதி அகர்வால். முன்னா மைக்கேல், டாய்லெட் ஆகிய இந்தி படங்களில் நடித்துள்ளார். பாலிவுட்டில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவர்.

ட்ரெண்டிங் ஆகுது போட்டோ

சமீபத்தில் இருவரும் மும்பை ஹோட்டல் ஒன்றில் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்திய போட்டோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. ஏனினும் டேட்டிங் ,காதல் போன்ற விஷயத்தை மறைமுகமாக மறுத்து விட்டார் நிதி அகர்வால் .

KL Rahul & Nidhi Agerwal

அவர் இணையதளம் ஒன்றிற்கு நிதி அகர்வால் தன் தரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். “ஆம் நான் ராகுல் அவர்களுடன் இரவு உணவு சாப்பிட சென்றேன். எங்களுக்குள் பல ஆண்டுகளாக பழக்கம் உண்டு. அவர் கிரிக்கெட் வீரர், நான் நடிகை ஆவதற்கு முன்பே டீன் ஏஜ் வயதில் இருந்தே பழகி வருகிறோம். அவ்வளவு தான். நாங்கள் கல்லூரியில் படிக்கவில்லை என்றாலும் எங்களுக்குள் பரஸ்பர பழக்கம் பல வருடங்களாக உண்டு.” என கூறினார் நிதி அகர்வால்.