Connect with us

Cinemapettai

கிரிக்கெட் வீரர்களை வளைத்து போடும் நடிகைகள்.. அடுத்த நட்சத்திர ஜோடி யாரு தெரியுமா?

bollywood-cricketers

Sports | விளையாட்டு

கிரிக்கெட் வீரர்களை வளைத்து போடும் நடிகைகள்.. அடுத்த நட்சத்திர ஜோடி யாரு தெரியுமா?

பாலிவுட் சினிமாவைப் பொருத்தவரை கிரிக்கெட் வீரர்களை திருமணம் செய்து கொள்வதில் நடிகைகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வீராட் கோலி அனுஷ்கா ஷர்மா, ஹர்பஜன், யுவராஜ், ஜாஹீர் கான் போன்றோர் பாலிவுட் நடிகைகளை திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

அந்த வகையில் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்தான் ஹர்டிக் பண்டியா. இவர் பிரபல பாலிவுட் நடிகை நட்டாஷா என்பவரை சமீபத்தில் நிச்சயம் செய்து கொண்டார். இந்த செய்தி காட்டுத்தீ போல் பரவியது. ஆனால் இந்த செய்தியின் தாக்கம் குறைவதற்கு முன்னரே மற்றொரு பிரபல கிரிக்கெட் வீரர் காதல் வாழ்க்கை அம்பலமாகியுள்ளது.

இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்குபவர் கேஎல் ராகுல். இவரது பேட்டிங்கை பார்ப்பதற்கே பல ரசிகர்கள் திரண்டு வருவார்கள். அந்த அளவு ஸ்டைலிஷாக பேட் செய்பவர். இவர் பிரபல நடிகர் சுனில் ஷெட்டி என்பவரின் மகள் அதியா ஷெட்டி காதல் செய்து வருகிறார்.

விரைவில் இவர்கள் திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் கேஎல் ராகுல் அமைதி காத்து வருவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹர்திக் பாண்டியா மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top