ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் கவுதம் காம்பீர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

ஐ.பி.எல் பத்தாவது சீசனின் 37வது லீக் போட்டியில் கொல்கத்தா அணியும் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை செய்கின்றன.

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் கவுதம் காம்பீர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

சொந்த மண்ணான ஹைதராபாத்தில் இதுவரை நடைபெற்றுள்ள 4 போட்டிகளிலும் ஹைதராபாத் அணியே வெற்றி பெற்றுள்ளதால் இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற கடுமையாக போராட வேண்டியிருக்கும்.