Sports | விளையாட்டு
சாவ்லாவை எடுத்த பின் CSK அட்மின் தட்டிய ஸ்டேட்டஸ்.. போட்டோவுடன் பங்கமாய் கலாய்த்த கொல்கத்தா
ஐபில் 2020 கொண்டாட்டம் கலை கட்ட துவங்கிவிட்டது. ஏலமும் முடிந்து
விட்டது. 73 வீரர்களுக்கான இடத்தில் 332 வீரர்கள் போட்டியிட்டனர். 8 டீம்களும் தங்களுக்கு தேவையான வீரர்களைத் தேர்வு செய்தனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பியூஷ் சாவ்லாவை ஏலத்தில் எடுத்து பலருக்கு ஆச்சர்யம் தான், அதிலும் ரூ.6.75 கோடி என்ற தொகையில் எடுத்துள்ளனர். ஏற்கனவே ஜடேஜா, ஹர்பஜன், கரண் சர்மா, நியூஸிலாந்தின் மிட்சல் சான்டனர், தென் ஆப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர் என ஐந்து ஸ்பின்னர் இருக்க ( ஜாதவ், ரெய்னா என பார்ட் டயம் ஸ்பின் வேறு) சாவ்லா மற்றும் சாய் கிஷோர் (20 லட்சம்) என எடுத்துள்ளனர்.
ஏலம் எடுத்த உடன் சி எஸ் கே ட்விட்டர் அட்மின் ஹல்வா சாவ்லா என எதுகை மோனையாக ட்வீட் தட்டினார். இதற்கு தான் கொல்கத்தா அணி பதில் தட்டியது. சாவ்லா தன் குழந்தையுடன் உள்ள போட்டோவை பகிர்ந்தனர். நீங்கள் ஏலம் எடுத்ததற்கான காரணம் எங்களுக்குத் தெரியும் என கிண்டல் செய்துள்ளனர்.
We know the reason 😜#DadsArmy #IPLAuction #KorboLorboJeetbo #IPL2020 pic.twitter.com/zoTwlP2SZX
— KolkataKnightRiders (@KKRiders) December 19, 2019
சென்னை அணியில் உள்ள வீரர்கள் பெரும்பாலும் 30 வயதைக் கடந்தவர்களாக இருப்பதால், விசில் போடு ஆர்மி என்ற பெயருடன் சேர்ந்து #DadsArmy என்றும் ட்விட்டரில் ஐபிஎல் ரசிகர்களால் அழைக்கப்படும் டீம் சென்னை.
The #DaddiesArmy has a brand new member! Welcome to the #SuperFam, Piyush! #SuperAuction #WhistlePodu 🦁💛 pic.twitter.com/PTvPSVRNz1
— Chennai Super Kings (@ChennaiIPL) December 19, 2019
