Sports | விளையாட்டு
சர்ச்சையில் சிக்கிய KKR ஸ்பின்னர்- இது என்னடா தினேஷ் கார்த்திக்கு வந்த சோதனை
ஐபிஎல் போட்டிகள் ஜரூராக நடந்து வருகிறது. டீம்கள் வெற்றி தோல்வி என சரிக்கு சரியாக பாயிண்ட்ஸ் டேபிளில் முன்னேறி வருகின்றனர்.
கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் பொறுத்தவரை சென்ற சீசன் போலவே இந்த சீஸனும் அதிரடியாக ஆடி வருகின்றனர். ப்ரெண்டன் மக்குல்லம் வழிகாட்டுதலில் டீம் அசத்தி வருகின்றது. துவக்கத்தில் கில், மத்திய வரிசையில் ராணா, பந்து வீச்சில் கம்மின்ஸ் என அணைத்து போட்டிகளிலும் அசத்தி வருகின்றனர்.
இந்தியாவின் இளம் வேகப்பந்துவீச்சாளர்கள் நாகர்கோட்டி, மாவி, ப்ரஸீத கிருஷ்ணா ஒரு புறம் கலக்க மறுபுறம் ஸ்பின் பந்துவீச்சில் தமிழகத்தின் வருண் சக்ரவர்த்தி அசத்தி வருகிறார். சற்றே பேட்டிங்கில் சொதப்பிய கேப்டன் கார்த்திக், நேற்று பார்முக்கு திரும்பினார். துவக்கத்தில் திரிபாதி செட் ஆகிவிட, ரசல் பேட்டிங் பார்முக்கு வந்துவிட்டால் இந்த டீம் சூப்பர் ஸ்ட்ராங் ஆகி விடும்.
தினேஷ் கார்த்திக்கின் அபாரமான கேப்டன்சியின் மூலம் கொல்கத்தா அணி சென்னை மற்றும் பஞ்சாப் டீம்களை வெற்றி பெற்றது என்று தான் சொல்ல வேண்டும். பந்துவீச்சாளர்களை அழகாக கையாண்டார்.

sunil narine
இந்நிலையில் ஸ்டார் ஸ்பின்னர் சுனில் நரேன் பந்துவீசுவது த்ரோ செய்யும் வகையில் உள்ளது என நடுவர்கள் ரிப்போர்ட் செய்துள்ளனர் நேற்று. அவருக்கு இந்த தொடரில் இது முதல் எச்சரிக்கையாக அளிக்கப்பட்டுள்ளது. அவர் தொடர்ந்து விளையாடலாம், எனினும் மீண்டும் நடுவர்கள் புகார் கொடுத்தால் அவர் விளையாட முடியாது.
பின்னர் பிசிசியின் குழு முன் பந்து வீசி நிரூபிக்க வேண்டிய நிலை வரும்.
கடந்த 2014 இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக்கில், 2015 ஐபிஎல் இல், மற்றும் 2018 இல் பாகிஸ்தான் லீக்கில் இதற்கு முன் இவரது பௌலிங் ஆக்ஷன் மீது புகார் அளிக்கப்பட்டது. தன் முயற்சி மற்றும் கொல்கத்தாவின் சப்போர்டுடன் ஆக்ஷன் மற்றயுள்ளார் நரேன்.
இப்பொழுது நடுவர்கள் புகார் கொடுத்துள்ளது டீமுக்கு புதிய தலைவலி தான். பேட்டிங்கில் சொதப்பினாலும் பந்துவீச்சில் கலக்கி வருகிறார் நரேன். கொல்கத்தா பெங்களூரு அணியுடன் மோதுகிறது.
