புனே அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐ.பி.எல் பத்தாவது சீசனின் 30வது லீக் போட்டியில் புனே அணியும் கொல்கத்தா அணியும் பலப்பரீட்சை செய்தன.

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் காம்பீர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து களமிறங்கிய புனே அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது, அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்மித் 56 ரன்களும், ரஹானே 46 ரன்களும் எடுத்திருந்தனர்.

இதனையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர் சுணில் நரைன் 16 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார்.

 

அதனைதொடர்ந்து ஜோடி சேர்ந்த காம்பீர் – உத்தப்பா கூட்டணி புனேவின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டு அணியின் ஸ்கோரை வலுப்படுத்தியது. காம்பீர் 62 ரன்களும், உத்தப்பா 87 ரன்களும் எடுத்து கைகொடுக்க 18.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 184 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.