fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

சூர்யாவை போற்று! தேசிய விருது கொடுக்கவில்லை எனில்.. வைரலாகுது பிரபல தயாரிப்பாளரின் ஸ்டேட்டஸ்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூர்யாவை போற்று! தேசிய விருது கொடுக்கவில்லை எனில்.. வைரலாகுது பிரபல தயாரிப்பாளரின் ஸ்டேட்டஸ்

2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில், சுதா கொங்கராவின் இயக்கத்தில், சூர்யா, அபர்ணா பாலமுரளி, பரேஷ் ராவல், ஊர்வசி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘சூரரைப் போற்று’.

படம் வெளியான பின் இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் கொண்டாடி வருகிறார்கள். இந்த லிஸ்டில் இணைந்துள்ளது KJR ஸ்டுடியோஸ் ராஜேஷ் அவர்கள்.

அவர் சொல்லியுள்ளது பின்வருமாறு ..

“சூரரைப் போற்று எல்லாத் துறைகளிலும் உயரப் பிறந்துள்ளது.  ஒரு கோபக்கார இளைஞனாக, ஆர்வமிகு இளம் தொழிலதிபராக, அன்பான கணவனாக அனைத்துக் காட்சிகளிலும் சூர்யா சிறப்பாக நடித்துள்ளார். அபர்ணா பாலமுரளி தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தான் வரும் ஒவ்வொரும் ஃப்ரேமிலும் தனது முத்திரையைப் பதிக்கிறார். ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை படம் முழுவதும் அற்புதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

captain gopinath surya

நிகேத் உடைய கேமரா ஃப்ரேம்கள் ஓவியம் போல இருக்கின்றன. கலை இயக்குநர் ஜாக்கி மற்றும் எடிட்டர் சதீஷ் சூர்யா நிச்சயமாக இன்னும் பல உயரங்களைத் தொடுவார்கள், வெவ்வேறு வாழ்த்துக்கள் கிடைக்கும்.

ஊர்வசி மேடம் அற்புதமாக நடித்துள்ளார். அவர் தான் தோன்றும் காட்சிகளைத் சிரமமின்றி சுமந்து நம் அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறார்.

kj rajesh about soorarai pottru

இது சூரரைப் போற்று அல்ல, சூர்யா போற்று! அவர் மாறனாகவே வாழ்ந்துள்ளார். இந்த வருடம் உங்களுக்காக தேசிய விருது காத்திருக்கிறது! இல்லையென்றால், நான் அதற்காகப் போராடுவேன்!

இறுதியாக, சுதா கொங்கரா! தொலைநோக்குப் பார்வை உடைய பெண். இந்தப் படைப்பின் மூலம் உச்சபட்ச முழுமையை பெற்று விட்டர்கள். . வணக்கங்கள்”.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top