Tamil Nadu | தமிழ் நாடு
பிரபல ஓட்டலில் புழுவுடன் உணவு பரிமாற்றம்.. அதிர்ச்சியான மக்கள்.. உரிமம் ரத்து
சென்னையின் பிரபல உணவகமான முருகன் இட்லி ஷாப்பில் உணவு தரமாக இல்லை என்று சர்ச்சை கிளம்பியுள்ளது. வாடிக்கையாளர் ஒருவர் உணவில் புழு இருப்பதாக கூறி அரசின் நடவடிக்கையின் படி, தற்போது அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள முருகன் இட்லி கடையின் உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர், சுகாதார கேடு, அலட்சியம் இன்மை உணவு தயாரிக்கும் போது முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டியவை. ஆனால் மக்கள் இன்று இருக்கும் வாழ்க்கை சூழ்நிலையால் 3 வேலையிலும் உணவு ஹோட்டலில் சாப்பிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகையால் இதுபோன்ற கவனக்குறைவு இல்லாமல் தரமான சாப்பாடுகளை மக்களுக்கு அளிக்க வேண்டும் என்ற சமூக அக்கறையில் இந்த செய்தியை வெளியிடுகிறோம். வாடிக்கையாளர் இந்த குறையை செயலி மூலம் அரசாங்கத்திற்கு தெரிவித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
