சினிமாவைப் போலவே தற்போது சின்னத்திரை சீரியலிலும் முத்தக்காட்சிக்கு பஞ்சமில்லை என்றே தோன்றுகிறது.

தற்போது சினிமாவில் இடம்பெறும் அனைத்தும் இப்போது சின்னத்திரை சீரியல்களிலும் இடம்பெற ஆரம்பித்து விட்டது. சினிமாவுக்கு நிகராக சீரியல் தயாரிக்கிறோம் என்றவர்கள் பிரமாண்டம், பாடல்கள், விறுவிறு திரைக்கதை என்று பயணிப்பார்கள் என்று எதிர்பார்த்தால் முத்தக்காட்சி, பாலியல் பலாத்கார காட்சி, கவர்ச்சி என பாதை மாறிக் கொண்டிருக்கிறார்கள்.

சின்னத்திரை சீரியல் உலகில் இப்போதைக்கு முத்த மழை பொழிந்து கொண்டிருப்பவர் மாப்பிள்ளை சீரியலில் இரண்டாவது நாயகியாக நடிக்கும் ஜனனி. எபிசோடுக்கு எபிசோட் முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

“என்னுடைய கேரக்டர் ரொம்ப போல்டானது முத்தக் காட்சியெல்லாம் இருக்கும் அதற்கு கடுமையான விமர்சனங்கள் வரும் அதையெல்லாம் தாங்கிக் கொள்ள முடியுமா?” என்று கேட்டுத்தான் நடிக்கவே அழைத்தார்கள். நானும் அதற்கு ஒப்புக் கொண்டுதான் வந்திருக்கிறேன்.அன்பை வெளிப்படுத்த முத்தம் சிறந்த வழிதானே இதுவரை சீரியலில் யாரும் அப்படி நடிக்கதாதல் இதனை பெரிதாக பார்க்கிறார்கள். சினிமாவில் முத்தக் காட்சிகள் இடம்பெறும்போது சீரியல்களில் இடம்பெறக்கூடாதா என்ன? சிலர் இதை விமர்சித்தாலும் பலர் இதனை வரவேற்கவே செய்கிறார்கள். நான் நடிக்கும் கேரக்டருக்கு என்ன தேவையோ அதைச் செய்வேன்’’ என்றார் ஜனனி.