சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ படத்தின் முதல் நாள் முதல் டிக்கெட்டை வாங்க கோலிவுட் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை காத்திருக்கும் நிலையில் புதுச்சேரி கவர்னராக சமீபத்தில் பதவியேற்ற ஐ.பி.எஸ் அதிகாரி கிரண்பேடி ‘கபாலி’ டிக்கெட் கிடைக்க ஒரு புதுமையான ஐடியாவை தெரிவித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  அய்யயோ ஒரே நேரத்தில் மூன்றா? அஞ்சலி என்ன செய்தார் தெரியுமா?

சமீபகாலமாக புதுச்சேரியை தூய்மையான மாநிலமாக மாற்ற அயராது பாடுபட்டு வரும் கிரண்பேடி, புதுவை மாநிலத்தை தூய்மையாக்க பொதுச்சேவை செய்ய முன்வரும் அனைவருக்கும் ‘கபாலி’ படத்தின் டிக்கெட் இலவசமாக வழங்கப்படும் என்று தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  பீப் பாடல் விவகாரத்தில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு - வாபஸ் வாங்கிய சிம்பு

அதுமட்டுமின்றி ‘தூய்மை புதுச்சேரி’ என்ற திட்டத்தின் பிராண்ட் அம்பாசிடராக ரஜினிகாந்த் பணிபுரிய முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். வெளிநாட்டில் இருந்து ரஜினி திரும்பி வந்ததும் இதுகுறித்து அவர் ரஜினியிடம் நேரிலும் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.