fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

முன்னாள் இந்திய ஸ்பின் ஜாம்பவானை பயிற்சியாளராக நியமித்த கிங்ஸ் XI பஞ்சாப் அணி

Sports | விளையாட்டு

முன்னாள் இந்திய ஸ்பின் ஜாம்பவானை பயிற்சியாளராக நியமித்த கிங்ஸ் XI பஞ்சாப் அணி

கிங்ஸ் XI பஞ்சாப் – ஐபில் போட்டிகளில் இன்னமும் கோப்பையை ஜெயிக்காத டீம்களில் ஒன்று. யுவராஜில் ஆரம்பித்து அஸ்வின் வரை வந்துள்ளது டீம். எனினும் ப்ரீத்தி ஜிந்தா மட்டுமே ஆறுதலாக அமைக்கிறார் ரசிகர்களுக்கு வருடா வருடம்.

இவைகள் தங்கள் டீம்மின் 2020 சீசனுக்கு அணில் கும்ப்ளே அவர்களை தலைமை பயிர்சியாளராக நியமித்துள்ளார். ஐபில் இல் பெங்களூரு அணிக்கு ஆடியவர், பின்னர் அந்த டீம் மற்றும் மும்பை இந்தியன்ஸ் டீம்களுக்கு மென்டார் ரோலில் இருந்தவர். இந்திய அணியின் கோச்சாகவும் இருந்தார், எனினும் விராத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விலகினார் என்பது இவர் கோச்சிங் காரியரில் குறிப்பிடத்தக்கது.

Anil Kumble

டீம்மின் அசிஸ்டன்ட் கோச்சாக கர்நாடகாவை சேர்ந்த சுனில் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார், பேட்டிங் கோச்சாக ஜார்ஜ் பெய்லி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பீல்டிங் கோச்சாக தென் ஆப்பிரிக்காவின் ஜான்ட்டி ரோட்ஸ் மற்றும் பௌலிங் கோச்சாக வெஸ்ட் இண்டிஸின் கோர்ட்னி வால்ஷ் நியமிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றதாம்.

ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த இரண்டு சீசனாக கேப்டன் பொறுப்பில், சூப்பர் ஆக ஆரம்பித்தார், ஆனால் டீம்மை பிளே – ஆப் அழைத்து செல்ல இயலவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன் டெல்லி காப்பிடல்ஸ் உடன் மாற்ற வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது. எனினும் கும்ப்ளே வந்த பின் அவர் அஸ்வினை வெளியேற விடமாட்டார் என்றே தோணுகிறது. மேலும் கர்நாடகாவின் கே எல் ராகுல், மாயங் அகர்வால், கருண் நாயர் உள்ளது கூடுதல் ஸ்பெஷல் இந்த டீமுக்கு. அதே போல் ஷமி, மந்தீப் சிங் போன்ற இந்திய வீரர்கள், கெயில், மில்லர், முஜீப் ரஹ்மான், வில்ஜோயின் போன்ற வெளிநாட்டு வீரர்கள் உள்ளதும் இந்த டீமுக்கு கூடுதல் பலமே.

https://twitter.com/Shivam_Anthwal/status/1182570221141258240

எனினும் பங்கர், சேவாக், ஹோட்ஜ், ஹிஸ்ஸன் தொடர்ந்து ஐந்தாவது முறையாக மீண்டும் ஒரு புதிய சீசன், புதிய கோச்சாக இணைகிறார் கும்ப்ளே.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top