Chris Gayle

11 வது ஐபில் சீஸனின் 16 வது போட்டியில் நேற்று இது வரை தோல்வியை சந்திக்காத ஹைதெராபாத் அணியும் பஞ்சாபும் மோதின.

டாஸ்

டாஸ் வென்றால் சேசிங் எடுத்து மேட்ச் ஜெயித்திவிடலாம் என்பது தான் சமீப காலமாக டி 20 போட்டியின் ட்ரெண்ட். இந்த சீசனில் பல அணிகள் பின்பற்றும் யுத்தியும் அதுவே. ஆனால் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் அஸ்வின் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். மேலும் பெரிய ஸ்கோர் எடுக்கும் பட்சத்தில் சன்ரைசர்ஸ் அணியை ரன் எடுக்கவிடாமால் கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையும் அவரிடம் இருந்தது.

R Ashwin
கெயில் புயல்

பஞ்சாப் அணி நிர்வாகம், யூனிவேர்சல் பாஸ் ஆன கிறிஸ் கெயிலை ஏன் முதல் இரண்டு போட்டியில் சேர்க்கவில்லை என்பது தான் அனைவரின் புரியாத புதிர். எனினும் கடந்த சிஎஸ்கே போட்டியில் அரை சத்தம் அடித்த கெயில், நேற்று சதம் அடித்து அசத்தினார். இவரும் ராகுலும் சிறப்பான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர்.

63 பந்தில் 104 ரன்கள் எடுத்து, இறுதிவரை நாட் அவுட் ஆக இருந்தார். 39 பந்தில் அரை சதம் கடந்த இவர் தனது அடுத்த 50 ரன்களை வெறும் 19 பந்தில் அடித்து சதம் கண்டார். இவர் 11 சிக்ஸர் மற்றும் 1 பவுண்டரி அடித்தார். அதிலும் குறிப்பாக ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான் வீசிய 14வது ஓவரில் தொடர்ச்சியாக 4 இமாலய சிக்ஸர்கள் அடித்தார்.

அதிகம் படித்தவை:  விரைவில் இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் தேர்வு : யாருக்கு வாய்ப்பு அதிகம்...
Chris Gayle

எனவே 20 ஓவரில் பஞ்சாப் அணி 193 ரன்கள் எடுத்து. கடின இலக்குடன் பேட்டிங் இறங்கியது சன்ரைசர்ஸ் அணி.

தவான் ரெட்டையர்டு ஹர்ட்

மாதத்தின் முதல் ஓவரை பரிந்தார் ஸ்ரான் வீசினர், அவர் வீசிய ஷார்ட் பிட்ச் பந்து தவானின் கையில் பட்டதால், அதிரடி துவக்கத்தை தருவார் என எதிர்பார்த்தநிலையில், அவர் காயம் காரணமாக வெளியேறினார். வார்னர் இல்லாத குறையை எளிதில் உணர முடிந்தது. ஒரு புறம் காப்டென் வில்லியம்சன் நிலைத்து ஆடினாலும் மறுபுறம் பதான், ஹூடா போன்றவர்கள் அவுட் ஒப்பி பார்மில் இருந்ததால், இந்த அணி தடுமாறியது. வில்லியம்சன், பாண்டே அரை சதம் அடித்தனர். எனினும் 4 விக்கெட் இழப்புக்கு 178 ரன் குவித்து, 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தனர்.

அதிகம் படித்தவை:  தோனியா - கார்திக்கா என்று யோசித்த நேரத்தில், ஒரே ஓவரில் 6 சிக்ஸ்ர்கள், 20 பாலில் சதம் அடித்த சாஹா !
பாஸ்ட் பௌலிங்

அஸ்வின் ஆரம்ப பவர் பிளேயில் இவர் மற்றும் முஜுபூர் ரஹ்மான் கண்டிப்பாக பந்து வீசுவார்கள். எனினும் நேற்றய போட்டியில் மைதான பெரியது என்பதால் ஆரம்பத்தில் வேகப்பந்துவீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்தினார். மத்திய வர்களில் தான் ஸ்பின் பயன்படுத்தினர். மேலும் கடைசி ஓவரையும் அஸ்வின் தான் வீசினார்.

சினிமாபேட்டை அலசல்

பஞ்சாப் அணிநிர்வாகம் கெய்லின் அதிரடியை நம்பி, அழகாக திட்டம் தீட்டி, அதை செயல்படுத்தியும் விட்டது. கெய்ல் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். கெயில் டி 20 போட்டியில் அடிக்கும் 21 வது சதம் ஆகும். மேலும் ஐபில் இல் அவர் அடிக்கும் ஆறாவது சதம்.

சன்ரைசர்ஸ் சஹா உடன் பேட்டிங்கை துவங்குவதை பற்றி சிந்திக்க வேண்டும், மேலும் மத்திய வரிசையில் ஆட்டத்தை செஸ் செய்து முடிக்கும் வகையில் யாரையேனும் தாயாரும் செய்யவேண்டும்.