Connect with us
Cinemapettai

Cinemapettai

Sports | விளையாட்டு

மகுடி ஊதிய பஞ்சாப் – சுருண்டது டெல்லி. 8 ரன்களுக்கு 7 விக்கெட். ஹாட் ட்ரிக் எடுத்த இளம் வீரர்.

ஐபில் தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14 ரன் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் டீம்மை வீழ்த்தியது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் முதுகு வலியால் பாதிக்கப்பட்ட கிறிஸ் கெய்ல், ஆன்ட்ரூ டை ஆகியோருக்கு பதிலாக முஜீப் ரகுமான், சாம் குர்ரன் இடம் பெற்றனர். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் அமித் மிஸ்ரா நீக்கப்பட்டு அவேஷ்கான் சேர்க்கப்பட்டார். ‘டாஸ்’ ஜெயித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

பள்ளி லெவெலில் மட்டுமே ஒபெநிங் ஆடிய இளம் வீரர் சாம் குர்ரன் ராகுலுடன் காலம் இறங்கினார். இருவரும் அடித்து ஆடினார்கள். லோகேஷ் ராகுல் (15 ரன், 11 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) சாம்குர்ரன் (20 ரன், 10 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகினர். பின்னர் சர்ப்ராஸ் கான், டேவிட் மில்லர், மன்தீப் சிங் உதவியுடன் 9 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது.

பின்னர் டெல்லி டீமின் ஷா டக் அவுட் ஆக, மற்றவர்கள் நிலைத்து நின்று ஆடினர். ஷிகர் தவான் 30 ரன்னும், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 28 ரன்னும், ரிஷப் பன்ட் 39 ரன்னும், காலின் இங்ராம் 38 ரன்கள் எடுத்தனர். எனினும் கடைசி நலங்கு ஓவரில் இந்த டீம் பெரிய சரிவை சந்தித்தது.

ரிஷப் பன்ட் – காலின் இங்ராம் ஜோடி ஆடிய பொழுது கடைசி நன்கு ஓவரில் 30 ரன் தேவை என இருந்தது. எளிதில் ஜெயிக்கும் என எதிர்பார்த்த நேரத்தில் ஷமி மட்டும் குர்ரன் அசத்தலாக வீசினர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. டெல்லி அணி தனது கடைசி 7 விக்கெட்டுகளை 8 ரன்களுக்குள் பறிகொடுத்தது. 17 மற்றும் 19 வது ஓவரில் ஷமி தல ஒரு விக்கெட் வீழ்த்தினார். 17 ஆம் ஓவரில் அஸ்வின் மொரிஸ் அவர்களை ரன் அவுட் செய்தார். குர்ரன் 18 மற்றும் 20 வது ஓவர்களில் தலா இரண்டு விக்கெட் எடுத்தார். அதிலும் 18 ஆம் ஓவரின் கடைசி பால் மற்றும் 20 வது ஓவரின் துவக்கத்தில் இரண்டு விக்கெட்டுகள் எடுத்து ஹாட் ட்ரிக் அடித்தார்.

sam curran

பஞ்சாப் அணி வீரர் சாம் குர்ரன் ஆட்டநாயகன் விருது பெற்றார்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top