விஜய் தமிழ் நடிகர்களில் முன்னணி நடிகர் ஆவார் இவர் தனக்கென்ன ஒரு மாபெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் விஜய் படம் திரைகளில் வந்தால் திரை முழுக்க கூட்டம் தான் இருக்கும்.அந்த அளவிற்கு ரசிகர்கள் அமர்கலபடுத்தி விடுவார்கள்.

vijay murugadoss movie
vijay

தளபதி விஜய் ஒரு பாக்ஸ் ஆபீஸ் வின்னர் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர். அவருடைய படங்களின் ரிசல்ட் எப்படி இருந்தாலும் ஓப்பனிங் வசூல் எந்த விதத்திலும் பாதிக்காமல் இருப்பதே அவரது மேஜிக். படத்தின் ரிசல்ட் பாசிட்டிவ் என்றால் வசூல் மழை நிச்சயம்

கடந்த 2004ஆம் ஆண்டு வெளிவந்த ‘கில்லி’ திரைப்படம் தான் தளபதி விஜய்யின் முதல் வசூல் மைல்கல். இன்றைக்கு 13 வருடங்களுக்கு முன்பே இந்த படம் ரூ.50 கோடி வசூல் செய்து சாதனை புரிந்தது. ரூ.50 கோடிக்கும் மேல் வசூல் செய்த முதல் விஜய் படம் என்ற பெருமையையும் பெற்றது.

அதிகம் படித்தவை:  Peace Bro.! தெறிக்கும் வசனத்துடன் வெளிவந்த மெர்சல் டீசர் வீடியோ..
vijay record
vijay

அதேபோல் முதன்முதலாக விஜய்யுடன் இணைந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயற்றிய ‘துப்பாக்கி’ திரைப்படம் விஜய்யின் முதல் ரூ.100 கோடி படமாக அமைந்தது. கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்த படம் விஜய், முருகதாஸ் இருவருக்குமே மறக்க முடியாத படம் ஆகும்

அதிகம் படித்தவை:  விஜயிடம் எல்லாமே பிடிக்கும் அதுதான் எனக்கு பிடிக்காது - விஷால்

இதனையடுத்து அட்லி இயக்கிய இரண்டாவது படமான ‘தெறி’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.150 கோடி வசூல் செய்து கோலிவுட் திரையுலகை வியக்க வைத்தது. ரஜினிக்கு அடுத்து பாக்ஸ் ஆபீஸ் மிஷின் விஜய் தான் என்பது இந்த படத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டது.

vijay

தற்போது கடந்த தீபாவளி அன்று திரைக்கு வந்த ‘மெர்சல்’ படம் ரூ.250 கோடி என்ற புதிய மைல்கல்லை தொட்டுள்ளது. பாக்ஸ் ஆபீச் வசூலில் படிப்படியாக முன்னேறி வரும் தளபதி விஜய் அடுத்த படத்தில் ரூ.500 கோடி வசூலை தொடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.