news_cinemapettai

பீகார் மாநிலத்தில் லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்.பி. பப்பு யாதவ். கருத்து வேறுபாடு காரணமாக இவர் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதையடுத்து  ஜன் ஆதிகார் என்ற கட்சியை தொடங்கிய பப்புயாதவ்  அதன்  தலைவராக உள்ளார். இந்நிலையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பப்புயாதவ் பேசினார்.

அப்போது, சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் சிஆர்பிஎப் வீரர்கள் மீது மாவோயிஸ்ட் நடத்திய கொடூர தாக்குதலில் 25 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அவர்   மாவோயிஸ்ட்கள் பாதுகாப்பு படை வீரர்களை கொல்லக்கூடாது என வலியுறுத்தினார்.

அதிகம் படித்தவை:  முன் கூட்டியே வெளியாகிறது விவேகம் டீசர் – சிறுத்தை சிவா அறிவிப்பு…!

மேலும் அதற்கு பதிலாக நாட்டையே கொள்ளை அடிக்கும் பேராசை பிடித்த அரசியல்வாதிகளை கொல்ல வேண்டும் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

அதிகம் படித்தவை:  குப்பை தொட்டியில் நிர்வாணமாக படுத்துகொண்டு போஸ் கொடுத்த பிரபல நடிகை.!

உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்டதை தொடர்ந்து நாட்டில் ஊழல், பயங்கரவாதம் மற்றும் மாவோயிஸ்ட்கள் பிரச்சனை தீர்ந்ததாக பிரதமர் மோடி கூறி இருந்தார். ஆனால்  இப்போதும் மாவோயிஸ்ட்கள் தாக்குதல் எப்படி தொடர்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.