Tamil Cinema News | சினிமா செய்திகள்
சர்கார் பர்ஸ்ட் லுக். சாந்தனுவின் ஏடாகூட டீவீட்டுக்கு, அசத்தலான பதில் கொடுத்த மனைவி கிகி விஜய் !

தளபதியின் உடன் பிறவா தம்பியான சாந்தனு என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு இவர்கள் நெருக்கம் பற்றி நம் கோடம்பாக்கம் அறிந்த விஷயம் தான். சாந்தனுவின் திருமணத்தில் கூட அனைத்து சம்பிரதாயங்களும் முடியும் வரை இருந்து தான் சென்றார் விஜய் . பின்னர் புதுமண தம்பதிகளான சாந்தனு-கீர்த்தியை தன் வீட்டிற்கு விருந்திற்கு அழைத்து, தடபுடலாக கவனித்தார். இந்த ஜோடிக்கு எப்பொழுதுமே விஜய் ஸ்பெஷல் தான்.
சர்கார் பர்ஸ்ட் லுக்
விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று சான் பிக்ச்சர்ஸ் நிறுவனம் படத்தின் தலைப்பு மற்றும் முதல் லுக் போஸ்டரை வெளியிட்டது. சாந்தனு போட்ட இந்த ட்வீட் பலரும் லைக் செய்துள்ளனர்.
எனினும் இதற்கு முன் அவர் வேற ட்வீட் தட்டி விட்டார். பின்னர் நெட்டிசன்கள் பலரும் பங்கமாக கலாய்த்ததால், அதனை டெலீட் செய்து விட்டார். இதோ அந்த ட்வீட் விவரம்.
அந்த டீவீட்டில் அவர் “என் மனைவியை கூட இப்படி ரசிச்சு நான் பார்க்கவில்லை” என ஒரு வரி சேர்த்திருந்தார்.

அதற்கு அவர் மனைவி கீர்த்தனாவும் “வாவ் ஸ்டைலிஷ் போஸ்டர். “நீ தான் உன் விஜய்னா வந்தா இந்த உலகத்தையே மறந்துடுவியே” என பதில் ட்வீட் செய்தார்.

மனைவியே டென்ஷன் ஆகாமல், புரிந்து கொண்டு கொள்ள இருந்த நிலையில், நம் நெட்டிசன்கள் பலரும், கண்ட படி கமெண்டுகளை தெறிக்க விட ஆர்மபித்தனர். முதலில் தானும் கடுப்பான சாந்தனு காட்டமாக பதில் அளித்தார்.

பின்னர் இந்த ட்வீட் விபரீத வடிவம் எடுப்பதை உணர்ந்த சாந்தனு அதனை டெலீட் செய்துவிட்டார்.
சினிமாபேட்டை காமெண்ட்ஸ்
அட்மின் பார்த்த வேலையா இருக்குமோ ?
