kiki vijay

கிகி விஜய்

கீர்த்தனா என்பது ஒரிஜினல் பெயராக இருப்பினும், கிகி என்று செல்லமாக அழைக்கப்படுபவர். பேமஸ் வி ஜே , மாடல், நடிகை என்று அசத்துபவர். நம் சாந்தனு பாக்கியராஜின் காதல் மனைவி. இந்த செலிபிரிட்டி ஜோடியை, அவர்களின் குணாதிசயத்துக்காக கோலிவுட்டில் பலருக்கு பிடிக்கும் .

shanthanu kiki vijay

டான்ஸ் ஸ்டூடியோ

kiki vijay

இந்நிலையில் தி நகரில் உள்ள ஆந்திரா க்ளுப்பில், இவர் டான்ஸ் ஸ்டூடியோ ஒன்றை தொடங்கியுள்ளார். சம்மர் வெகேஷன் என்பதை மனதில் வைத்து துவங்கப்பட்ட இதில் மே 1 முதல் க்ளாஸ் துவங்கியுள்ளது. மேலும் 9 மணி, 11 மணி என இரண்டு பேட்சுகள். திங்கள் முதல் சனிக்கிழமை வரை என ஆரம்பிக்கப்பட்டது.

எனினும் பலர் ஆர்வம் கட்டியதன் காரணத்தால், ஒரு நாளில் நான்கு பேட்ச் என்று மாற்றியுள்ளனர். முறையே காலை 9 , 11 ; மாலை 4 , 5 என்பதாகும்.

சாந்தனு

kiki vijay

ஆரம்பம் முதலே வாரம் ஒரு செலிபிரிட்டி வந்து உங்களுடன் டான்ஸ் ஆடுவார்கள் என்று அறிவித்திருந்தார் கீர்த்தனா. அந்த வகையில் இந்த முதல் வாரம் அதாவது வரும் வெள்ளியன்று மே 4 அவர் கணவர் ஷாந்தனுவே கலந்துகொள்ளவுள்ளார். இதனை அவரே தன் ட்விட்டர் கணக்கில் வீடியோவாக அறிவித்துள்ளார்.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

மணாளனே மணவாட்டியின் பாக்கியம் !!!

அதிகம் படித்தவை:  திருமணத்திற்கு முன்னர் உறவு: கதிகலங்க வைக்கும் கொடூர தண்டனை