Connect with us
Cinemapettai

Cinemapettai

பீல்ட் அவுட் ஆனாலும் இவர் படத்தில் தான் நடிப்பேன்.. அடம்பிடிக்கும் சாந்தனு மனைவி

shanthanu

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பீல்ட் அவுட் ஆனாலும் இவர் படத்தில் தான் நடிப்பேன்.. அடம்பிடிக்கும் சாந்தனு மனைவி

தொலைக்காட்சி நிகழ்ச்சியை மக்களை சலிப்படையாமல் கொண்டு செல்லும் பொறுப்பு அந்தந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களையே சேரும். அப்படியாக சில தொகுப்பாளர்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பது வழக்கமான ஒன்று.

ஆண் தொகுப்பாளர்களில் மா.க.பா.ஆனந்த் முதல் சிவகார்த்திகேயன் வரை பெண் தொகுப்பாளர்களில் திவ்ய தர்ஷினி துவங்கி பாவனா, ரம்யா, ஜாக்குலின் என வரிசை நீண்டதே. அப்படியான தொகுப்பாளிளனியாக இருந்தவர் தான் கீர்த்தி என்கிற கிகி நடிகர் சாந்தனுவை காதல் திருமணம் செய்து கொண்ட இவர்.

பல்வேறு தொலைக்காட்சிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் மிகவும் அறியப்பட்ட ஒரு பிரபலம் தான். அவரிடம் சினிமாவில் நீங்கள் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு சுவாரஸ்யமான பதில் ஒன்றை தந்துள்ளார்.

kiki vijay

ஏறத்தாழ மூன்று படங்கள் அவருக்கு நடிக்க கேட்டு வந்ததாகவும் தான் நிராகரித்ததாகவும் கூறினார். எந்த மாதிரியான படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிப்பீர்கள் என்ற கேள்விக்கு என் மாமனார் இயக்குனர் பாக்கியராஜ் இயக்கத்தில் நாயகியாகா நடிக்க ஆசை என்று கூறியுள்ளார்.

முருங்கைக்காய் முருங்கை கீரை காமெடிகளில் கிகியை விரைவில் எதிர்பார்க்கலாம். எதிர்பார்த்து காத்திருக்கும் கிகி ரசிகர்களோடு இணைந்து நாமும் காத்திருப்போம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top