நடிகை பாவனா கடத்தல் வழக்கில் மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.

கடந்த பிப்ரவரி 17-ம் தேதி படப்பிடிப்பு முடிந்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நடிகை பாவனாவை கொச்சி அருகே ஒரு கும்பல் கடத்தியது. அவரை சுமார் 4 மணி நேரம் பாலியல்ரீதியாக துன் புறுத்திய அந்த கும்பல் அதனை வீடியோவில் பதிவு செய்தது.

இந்த சம்பவம் தொடர்பாக பல்சர் சுனில், பாவனாவின் கார் ஓட்டுநர் மார்ட்டின் அந்தோனி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். கடத்தல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட பல்சர் சுனில் போலீஸில் அளித்த வாக்குமூலத்தில் ரூ.50 லட்சத்துக்காக பாவனாவை கடத்தியதாக தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் நடிகை பாவனா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் திலீப் மீது போலீஸாரின் சந்தேகப் பார்வை திரும்பியது.

கடத்தல் பின்னணி

கடந்த 1998-ம் ஆண்டில் நடிகை மஞ்சு வாரியரை, திலீப் திருமணம் செய்தார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2014-ல் விவாகரத்து பெற்றனர். பின்னர் கடந்த ஆண்டு நவம்பரில் நடிகை காவ்யா மாதவனை, திலீப் திருமணம் செய்தார்.

படப்பிடிப்புகள், விருது விழாக் களில் திலீப்பும் காவ்யா மாதவனும் நெருங்கிப் பழகியதை மஞ்சுவாரியரிடம் சொல்லி அவர் களின் பிரிவுக்கு பாவனா காரண மாக இருந்தார் என்று கூறப்படு கிறது. அதற்கு பழிவாங்கவே நடிகர் திலீப் உத்தரவின்பேரில் பாவனா கடத்தப்பட்டார் என்று கூறப்படுகிறது.bhavana

இது குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியபோது, “நடிகை பாவனாவுக்கும் தயாரிப்பாளர் நவீனுக்கும் திருமணம் செய்ய இருவீட்டார் முடிவு செய்திருந்தனர். இதை தடுக்க பாவனாவை கடத்தி படம் பிடித்து அந்த படத்தை நவீனுக்கு அனுப்ப சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்தது” என்று தெரி வித்தன.

திலீப் கைது

இந்த குற்றச்சாட்டுகளை நடிகர் திலீப் ஆரம்பம் முதலே மறுத்து வருகிறார். கடந்த வாரம் அவரிடம் சுமார் 12 மணி நேரம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதேபோல அவருக்கு மிகவும் நெருக்கமான இயக்குநர் நாதிர்ஷா, சகோதரர் அனுப், மேலாளர் அப்புண்ணி ஆகியோரிடமும் போலீஸார் தனித் தனியாக விசாரணை செய்தனர்.

இதனிடையே நடிகர் திலீப் போலீஸில் அளித்த புகாரில், பாவனா வழக்கில் தன்னை சம்பந்தப்படுத்தாமல் இருக்க பல்சர் சுனில் பணம் கேட்டு மிரட்டுவதாக தெரிவித்திருந்தார். இதுகுறித்தும் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் திடீர் திருப்பமாக பாவனாவை கடத்தியபோது எடுக்கப்பட்ட படங்கள், வீடியோ அடங்கிய மெமரி கார்டை நடிகர் திலீப்பின் மனைவி காவ்யா மாதவனின் ஆடை நிறுவனத்தில் அளிக்கப்பட்டிருப்பதாக போலீஸா ருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கொச்சி அருகேயுள்ள அந்த ஆடை நிறுவனத்தில் சில நாட்களுக்கு முன்பு போலீஸார் சோதனை நடத்தினர்.

இந்தப் பின்னணியில் நடிகர் திலீப்பிடம் கொச்சியில் உள்ள ரகசிய இடத்தில் வைத்து போலீஸார் மீண்டும் விசாரணை நடத்தினர். அன்று மாலையே  அவர் கைது செய்யப்பட்டார்.

அடுத்து காவ்யா மாதவன்?

வழக்கு தொடர்பாக நடிகை காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்த போலீஸார் பலமுறை முயன்றனர். ஆனால் அவரும் அவரது தாயாரும் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது. அடுத்ததாக காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்தப்பட்டு அவரும் கைது செய்யப்படக்கூடும் என்று கேரள போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நண்பரும் கைது

நடிகர் திலீப்பின் நெருங்கிய நண்பரான இயக்குநர் நாதிர் ஷாவிடம் போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரும் கைது செய்யப்பட்டார்.

நடிகர் திலீப் கைது குறித்து காவ்யா மாதவனின் குடும்ப வட்டாரங்களை நிருபர்கள் தொடர்பு கொண்டபோது, அவர்கள் பதில் அளிக்க மறுத்துவிட்டனர். இதேபோல நடிகை பாவனாவின் குடும்ப வட்டாரங்களும் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.

2013-ல் பாவனாவை கடத்த முயற்சி

நடிகை பாவனா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளி பல்சர் சுனிலிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளன. கடந்த 2013-ம் ஆண்டில் கேரளாவுக்கு வெளியே பாவனாவை கடத்த முயற்சி நடந்துள்ளது. ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்தது. பின்னர் 2014-லிலும் கடத்தல் முயற்சி வெற்றி பெறவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் மூன்றாவது முறையாக கடத்தப்பட்டு மானபங்கம் செய்ய முயற்சிக்கப்பட்டது.

பரபரப்பை ஏற்படுத்திய இந்த செயலுக்கு பின்னால் பிரபல மலையாள நடிகர் திலீப் இருந்தார் என்ற தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் கைது செய்யப்பட்ட திலீப்பின் ஜாமின் மனு நான்கு முறை நிராகரிக்கப்பட்டும் ஐந்தாவது முறை நடந்த விசாரணையின்போது அரசு தரப்பு வழக்கறிஞர் அதிர்ச்சிகர தகவலை கூறினார்.

பாவனாவை கடத்திய பல்சர் சுனிலுக்கு ரூ. 1.50 கோடி பேரம் பேசப்பட்டதாம். போலீசில் மாட்டிக்கொண்டால் ரூ. 3 கோடி என்றும் கூறப்பட்டதாம்.

இது நடந்தால் திலீப்புக்கு ரூ. 65 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் என்றும் சுனில் சக கைதிகளிடம் கூறியதாக நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தெரிவித்தார்.