Reviews | விமர்சனங்கள்
சூப்பர் ஸ்டார் பயமுறுத்தும் அமானுஷ்ய திரில்லர்.. விக்ராந்த் ரோணா திரைவிமர்சனம்
கேஜிஎப் படத்தின் ரிலீசுக்கு பின் கன்னடா சினிமா அடுத்த லெவெலுக்கு சென்று விட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. பான் இந்தியா ரிலீஸ் என்ற நோக்கில் பல படங்கள் ரெடியாகி வருகிறது. கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் சுதீப் நடிப்பில் அதிக எதிர்பார்ப்புக்கு நடுவில் வெளியாகி உள்ள படம் தான் விக்ராந்த் ரோணா. பிரம்மாண்ட செலவில் 3 டி தொழில்நுட்பத்தில் ஆக்ஷன், பாண்டஸி கலந்த திரில்லர் பீரியட் ட்ராமா படம் எப்படி இருக்கு என வாங்க பார்ப்போம்.
கதை – மலை பிரதேச கிராமம், அங்கு குழந்தைகளின் மரணம் அடிக்கடி நிகழ்கிறது. பிரம்மராட்சஷனின் வேலை என மக்கள் நம்புகின்றனர். அந்த ஊரில் புதிய இன்ஸ்பெக்ட்டராக சார்ஜ் எடுக்கிறார் நம் ஹீரோ. அவர் சிறுவயதில் அந்த ஊரில் சில காலம் வாழ்ந்ததன் காரணத்தால் அவருக்கு பல விஷயம் தெரிகிறது. ஒரு புறம் பழைய இன்ஸ்பெக்டரை கொன்றது யார் மறுபுறம் குழந்தைகள் சாவுக்கு யார் காரணம் என இரண்டையும் அலசி ஆராய்கிறார்.
சிறு வயதில் ஓடி போன ஊர்த்தலைவர் மகன் வெளிநாட்டில் இருந்து மீண்டும் வருகிறான். லோக்கல் கடத்தல் பார்ட்டி, ஸ்கூல் ஹெட் மாஸ்டர் என விசாரணை நகர்கிறது. பல வருடங்களுக்கு முன் ஊர்காரர்கள் அடித்து கொன்ற “நிட்டோனி” என்பவனின் ஆவி தான் இதற்கு காரணம் என பலரும் நம்புகின்றனர்.
இந்நிலையில் நிட்டோனியின் மகன்கள் என்ன ஆனார்கள், அவர்களுக்கும் இந்த கொலைகளுக்கும் என்ன சம்பந்தம் என ஹீரோ கண்டுபிடிக்க ஆக்ரோஷமான சண்டையுடன் கிளைமாக்ஸ் முடிகிறது.
சினிமாபேட்டை அலசல்– இந்தியானா ஜோன்ஸ் ஸ்டைலில் வந்து செல்கிறார் சுதீப். இப்படத்தின் ஓடும் நேரம் மிக பெரிய மைனஸ். முதல் பாதி மிகவும் ஸ்லோ, நமது பொறுமையை சோதிக்கிறது. இதன் காரணமாகவே இரண்டாம் பாதி நன்றாக இருந்தும் நமக்கு சலிப்பே ஏற்படுகிறது. இப்படத்திற்கு ஏன் 3 டி என்பதும் புரியாத புதிர் தான். ஐட்டம் பாடலுக்காக மட்டுமே ஜாக்லின் பெர்னாண்டஸ். தேவையற்ற பாடல்கள், லவ் ட்ராக் போன்றவற்றை இயக்குனர் அனூப் பண்டாரி தவிர்த்திருக்கலாம்.
சினிமாபேட்டை வெர்டிக்ட்– இரண்டு மணி நேரத்தில் சூப்பர் திரில்லர் படமாக எடுப்பதற்கான கதை இருந்தும் தொய்வான திரைக்கதை, சுமாரான எடிட்டிங் வாயிலாக சொதப்பி விட்டனர். நம் பொறுமையை அதிகம் சோதிக்கிறது இந்த படம்.
சினிமாபேட்டை ரேட்டிங் – 2.25/5
