Tamil Cinema News | சினிமா செய்திகள்
செம்ம ஆக்ஷன் படம் போலயே.. வைரலாகுது சுதீப்பின் புதிய பட மாஸ் போஸ்டர்
கன்னட சினிமாவின் பாதுஷாவாக இருப்பவர் கிச்சா சுதீப். 2012ம் ஆண்டு வெளியான ‘நான் ஈ’ படத்தின் வாயிலாக தமிழகத்தில் நல்ல ரீச் கிடைத்தது மனிதருக்கு.சுதீப் நடிப்பில் ரெடியாகும் புதிய படம் (Phantom) பாண்ட்டம். இப்படத்தை அனுப் பண்டாரி இயக்கி வருகிறார்.
இதுவரை இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். சுதீப் வைத்து “பில்லா ரங்கா பாஷா” என்ற படத்தை துவங்கப்போவதாக பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் பாண்ட்டும் என்ற ப்ரொஜெக்ட் டேக் ஆப் ஆனது.
கடந்த மாதம் அரசு அனுமதித்த பின் இப்படத்தின் ஷூட்டிங் துவங்கியது. ஆம்பலன்ஸ், டாக்டர், நர்ஸ் சகிதம் இவர்கள் ஷூட்டிங் நடத்தியது அப்போதைய ட்ரெண்டிங் சமாச்சாரம்.
ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஹீரோயினாக நடிக்கிறார். இயக்குனரின் தம்பி முக்கிய ரோலில் கமிட் ஆகியுள்ளாராம். இப்படத்தில் நம் ஹீரோவின் கதாபாத்திர பெயரும், கெட் அப் லுக் போஸ்டரும் வெளியிலாகி வைரலானது. விக்ராந்த் ரோனா என்பதே ஹீரோவின் பெயர். கோல்ப் தொப்பி, கையில் துப்பாக்கி, பூட்ஸ் என பிரம்மாண்ட சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளார் நம் ஹீரோ.

kicha sudeep as vikranth rona in phantom
பீரியட் ட்ராமா படமா, ட்ரெஷர் ஹண்ட் கலந்த ஆக்ஷன் படமா என போஸ்டரை பார்த்த பின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நம்ம ஊரு இந்தியானா ஜோன்ஸ் டோய் என சொல்ல தோன்றுகிறது நமக்கு. காத்திருப்போம் அடுத்த அப்டேட்டுக்காக.
