Tamil Cinema News | சினிமா செய்திகள்
காலை தலையில தூக்கி வச்சுக்கோங்க.. கலாய்த்த ரசிகர்கள்.. கியாரா அத்வானி செம்ம கிளிக்
பாலிவுட்டையே கலக்கி கொண்டு வரும் நடிகை கியாரா அத்வானி. தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான ‘எம். எஸ். தோனி தி அன் டோல்டு’ ஸ்டோரி படம் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
பரத் அனே நேனு என்ற பெரிய ஹிட் படத்தின் மூலம் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடித்து பக்கத்து மாநிலமான ஆந்திர ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். தெலுங்கில் சில படங்களில் தொடர்ந்து நடித்த கியாரா அத்வானி இப்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உயர்ந்துவிட்டார்.
தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டியின் இந்தி ரீமேக்கில் ஷாத் கபூர் உடன் இணைந்து நடித்தார். இந்த படத்தை வரும் காதல் காட்சிகள் எவ்வளவு பிரசித்தம் என்பது எல்லாருக்கும் தெரியும். இதனால் இந்தியில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகிவிட்டார்கள்.
அவ்வப்போது கியாரா போட்டோஷூட் எடுத்து இன்ஸ்டாகிராமில் போடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், ரசிகர்களை ஜில் ஜில் கூல் கூல் ஆக்கும் வகையில் கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் காலை தூக்கி தலையில் வைத்துக் கொள்ளுங்கள் என்று நக்கலாக கமெண்ட் செய்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

kiara
