Tamil Cinema News | சினிமா செய்திகள்
அத நிறுத்துங்க கொஞ்சம் கொழுப்பு குறையும்.. குஷ்புவை அநியாயத்துக்கு கலாய்த்த பிக்பாஸ் நடிகை
தமிழ் சினிமாவில் 80-90களில் கலக்கிக் கொண்டிருந்தவர் குஷ்பு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் நடித்துள்ளார்.
கமல், ரஜினிகாந்த், விஜயகாந்த், சரத்குமார் என்று இணைந்து நடிக்காத முன்னணி நடிகர்களே கிடையாது என்றே கூறலாம். குஷ்புவுக்கு கோவில் கட்டினார்கள் என்ற பெயர் இன்று வரை நிலைத்து இருக்கிறது. இவர் தற்போது அரசியலில் ஈடுபட்டு அடிபட்டு நொந்து நூலாகி மீண்டும் சினிமாவில் கால் பதித்துள்ளார்.
அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அரசியல் வேண்டாம் என்று சின்னத்திரையிலும் கால் பதித்துள்ளார் குஷ்பூ.
இது ஒருபுறமிருக்க, பிக்பாஸ் மூலம் பிரபலமான காயத்ரி ரகுராம் அவ்வப்போது சமூகவலைத்தளத்தில் ட்வீட் போட்டு வழக்கம்போல் சர்ச்சையை கிளப்புவார். அந்த வகையில் குஷ்பூ தான் ஐஸ்கிரீம் சாப்பிடுவதை நிறுத்த போவதாக போட்ட ட்விட்டருக்கு பதிலளித்துள்ளார் காயத்ரி ரகுராம்.
ஐஸ்கிரீம் சாப்பிடுவதை நிறுத்துங்கள் அப்படியாவது உங்களுக்கு கொழுப்பு குறையட்டும் என்று வெளிப்படையாக கூறியிருப்பது ரசிகர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருபுறம் விளம்பரம் என்று எடுத்துக்கொண்டாலும் முன்னணி நடிகையை சமூகவலைத்தளத்தில் அசிங்க படுத்தியதால் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

khushbu
காயத்ரி ரகுராம் பட வாய்ப்பு இல்லை என்றாலும் இதே போல் வம்பிழுப்பது வாடிக்கையாக கொண்டுள்ளார். ஆனால் ரசிகர்கள் சும்மா விடுவாங்களா வச்சு செய்கிறார்கள்.
குஷ்பு போட்ட ட்வீட்டுக்கு ரசிகர்கள் பதில் அளிக்கும் வகையில் கண்ணா பின்னா என்று கலாய்த்து வருகின்றனர்.
சகிக்கல

khushbu
சரக்கு அடிக்கறத முதல்ல நிறுத்துங்க!

khushbu
மேக்கப் போடுவதை விட்றுக்கலாம்!!

khushbu
