Tamil Cinema News | சினிமா செய்திகள்
குஷ்பு அரசியலில் கூடு விட்டு கூடு பாய்வதற்கு இவர் தான் முக்கிய காரணமாம்.. அதிருப்தியில் ரசிகர்கள்
பல நாட்களாக குஷ்பூ சுந்தர் பாஜகவில் இணையப் போவதாக செய்திகள் வெளிவந்த நிலையில் நேற்று அதனை உண்மையாக்கி உள்ளார் குஷ்பூ.
இந்நிலையில் குஷ்புவை பாஜகவில் இணைய அழுத்தம் கொடுத்தது அவரது கணவர் சுந்தர் சி தான் என்று குற்றம்சாட்டியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கோபண்ணா.
அதாவது குஷ்பூ காங்கிரஸ் கட்சியில் செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் பணியாற்றி வந்தார்.
ஆனால் நேற்று காங்கிரஸ் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டு, அதில் குஷ்பு இதுவரை வகித்து வந்த செய்தி தொடர்பாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக அறிவித்தது காங்கிரஸ் கட்சி.
அதைத் தொடர்ந்து குஷ்பு தனது விலகல் கடிதத்தை வெளியிட்டார். மேலும் அதில் தான் காங்கிரஸ் கட்சிக்கு சிறப்பான பணியாற்றியதாகவும், அதில் இருக்கும் சில தலைவர்கள் தன்னை ஒதுக்குவதாகவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கோபண்ணா, “சில காலங்களாகவே குஷ்பு காங்கிரஸ் கட்சியில் ஆர்வம் குறைந்து காணப்பட்டார். நாங்கள் அழைக்கும் போது கூட படப்பிடிப்பில் பிஸியாக இருப்பது போல தகவல்கள் கிடைத்தன.
இந்நிலையில் தற்போது அவரது கணவர் சுந்தர் சி தான் குஷ்புவை பாஜகவில் இணைய வைத்திருக்கிறார். மேலும் இது சுந்தர் சி- யின் அழுத்தத்தின் காரணமாக குஷ்பு எடுத்த முடிவு தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சுந்தர் சி, தமிழக பாஜக தலைவர் AL முருகனை சந்தித்தபோதும் இதே போன்ற விமர்சனங்களே எழுந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

kushbu
