fbpx
Connect with us

குஷ்பு, காயத்ரி ரகுராம் இடையே நடந்த மதச்சண்டை.. களத்தில் இறங்கிய நெட்டிசன்கள் யாருக்கு ஆதரவு

Tamil Cinema News | சினிமா செய்திகள்

குஷ்பு, காயத்ரி ரகுராம் இடையே நடந்த மதச்சண்டை.. களத்தில் இறங்கிய நெட்டிசன்கள் யாருக்கு ஆதரவு

சமீப காலமாக இந்தியாவில் பலரும் ஒற்றுமையாக இருக்கும் நேரத்தில் சிலர் மட்டும் ஜாதிச்சண்டை, மதச்சண்டை என ஈடுபட்டு வருகின்றனர். சமீபகாலமாக இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற மதத்தை சேர்ந்த ஒவ்வொருவரும் மற்றொரு மதத்தினை பற்றி தவறாக பேசுவது அதனை எடுத்து ஒரு வீடியோவாக போடுவது போன்ற செயல்களில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வரிசையில் நடிகை குஷ்புவும் இடம் பிடித்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் 22 வயது சேர்ந்த இளைஞர் ஒருவர் திருடியதாக பிடித்து அவரை ஜெய் ஸ்ரீராம் என சொல்லும்படி கட்டாயப்படுத்தி தாக்கினர். அந்த இளைஞரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகை குஷ்பூ ஜெய் ஸ்ரீ ராம் என சொல்லி ஒரு இளைஞரை கொன்று விட்டனர் என பதிவிட்டு இருந்தார். இதுதான் புதிய இந்தியாவை என கேள்வி எழுப்பினார்.

அதற்கு நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் இந்துக்களை கொலைகாரர்கள் போல் பார்ப்பது டிரெண்ட் ஆகி விட்டது. இது போல் மற்ற மதத்தினர் தவறு செய்தால் அதனை பெரிதாக யாரும் பார்ப்பதில்லை எனக் கேட்டார். அதற்கு குஷ்பு உங்கள் உறவினர் மீதும் மரியாதை வைத்திருக்கிறேன் அதனால் நீங்கள் வாய் மூடிக் கொண்டு இருப்பது நல்லது என பதிவிட்டிருந்தார்.

இதனை பார்த்த ரசிகர்கள் குஷ்புவுக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.

அதாவது எல்லா மதத்திலும் யாராவது ஒருவர் தவறு செய்வார் அதற்காக அந்த ஒரு மதத்தை சேர்ந்தவர்களை முழுமையாக குறை சொல்வது தவறு. இந்தியாவில் அனைவரும் ஒற்றுமையாக தான் இருக்கிறோம் இந்த மாதிரி பிளவு ஏற்படும் விதமாக பேச வேண்டாம் என்ற குஷ்புவிற்கு அறிவுரை கூறி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top