Connect with us
Cinemapettai

Cinemapettai

kushpoo-raja

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கோபத்தில் கொந்தளித்த குஷ்பூ அண்ட் கோ.. அப்ப நீங்க தப்பு தப்பா பேசினது ஞாபகம் இல்லையா!

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்த குஷ்பூக்காக ரசிகர்கள் கோவில் கூட கட்டி இருக்கிறார்கள். அப்படி புகழின் உச்சியில் இருந்த குஷ்பூ தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே திமுக கட்சியில் இருந்த அவர் சில காரணங்களால் அங்கிருந்து வெளியேறி தற்போது பாஜக கட்சியில் இணைந்து இருக்கிறார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுகவைச் சேர்ந்த சைதை சாதிக் ஒரு மேடையில் பாஜகவை சேர்ந்த குஷ்பூ, காயத்ரி ரகுராம், கௌதமி உள்ளிட்ட பலரை பற்றி மோசமாக விமர்சனம் செய்திருந்தார். அதிலும் குஷ்பூ குறித்து அவர் மிகவும் தரக்குறைவாக, கொச்சையாக பேசியது கடும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. பெண்களின் ஒழுக்கத்தை பற்றி கேவலமாக பேசிய அவருக்கு எதிராக பலரும் கொந்தளித்தனர். இதற்காக திமுக சார்பில் இருந்து கனிமொழி குஷ்புவிடம் மன்னிப்பு கேட்டிருந்தார்.

Also read : இப்போதுள்ள ஹீரோயின்கள் கூட ஜொள்ளுவிடும் 90’s ஹீரோக்கள்.. ராம்கி ஹேர் ஸ்டைலை இன்றும் மறக்காத குஷ்பூ

ஆனால் இந்த நிகழ்வினால் கடுமையாக அப்செட் ஆன குஷ்பூ இது குறித்து டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார். மேலும் சாதிக்கின் பேச்சு குறித்து தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்த பிறகு குஷ்பூ ஊடகங்களுக்கு பேட்டியும் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் பொது மேடையில் பெண்களை பற்றி அசிங்கமாக பேச மாட்டார்கள் என்று மிகவும் காட்டமாக தெரிவித்துள்ளார்.

இதுதான் சோசியல் மீடியாவில் தற்போது பேசும் பொருளாக மாறி இருக்கிறது. ஏனென்றால் குஷ்பூ திமுக கட்சியில் இருந்தபோது அவரைப் பற்றி பாஜகவின் முக்கிய நபராக இருக்கும் ராஜா படுமோசமாக பேசியிருந்தார். அவர் மட்டுமல்லாமல் அந்தக் கட்சியில் இருந்த பல முக்கிய பிரமுகர்களும் எதிரணியில் இருக்கும் பெண்களைப் பற்றி மோசமாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Also read : திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குஷ்பூ.. இப்படி ஒரு பிரச்சனையா! வைரலாகும் ட்விட்

ஆனால் அதைப் பற்றி எல்லாம் யோசிக்காமல் திமுகவிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்த குஷ்பூ தற்போது எதிரணி என்ற காரணத்தினால் இந்த அளவுக்கு கொந்தளித்துக் கொண்டிருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் உங்கள் கட்சியில் மட்டும் பெண்களை தப்பு தப்பாக பேசவில்லையா, அதெல்லாம் உங்களுக்கு மறந்து விட்டதா என்று குஷ்பூ அண்ட் கோ விடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் இங்கு புகார் கொடுக்க முடியாமல் தான் டெல்லி வரை சென்று புகார் அளித்தீர்களா என்ற கேள்வியும் எழுந்து வருகிறது. உண்மையில் சைதை சாதிக் பேசிய விதம் அவருடைய கட்சியினரையே அதிர்ச்சி அடைய வைத்தது. தற்போது தன்னுடைய பேச்சுக்காக அவர் மன்னிப்பும் கேட்டிருக்கிறார். ஆனாலும் குஷ்பூ அவர் மீது புகார் கொடுத்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Also read:அரவிந்த் சாமியை பார்த்து ஜொள்ளு விட்ட 5 ஹீரோயினிகள்.. இன்றுவரை க்ரஸ்ஷில் இருக்கும் குஷ்பூ

Continue Reading
To Top