செலிபிரிட்டிகளின் புகைப்படங்கள், விடியோக்கள் அவ்வப்பொழுது இணையத்தில் வந்து வைரலாவது, தற்போதையே ஸ்மார்ட் போன் உலகில் சர்வ சாதாரணமான நிகழ்வு ஆகிவிட்டது.

சலீம் படத்தை இயக்கிய நிர்மல் குமார் இயக்கத்தில் அடுத்து வெளிவரப்போகிற படம் சதுரங்க வேட்டை 2. இரண்டாம் பாகத்தில் அரவிந்த் சாமி, திரிஷா, பிரகாஷ் ராஜ், சிம்ரன், டானியல் பாலாஜி, நாசர், ராதா ரவி போன்றோர் நடிக்கிறார்கள். இதன் தயாரிப்பாளர் மனோபாலா ஆவார்.

நாம் பகிரும் இந்த வீடியோ இப்படம் சம்பந்தமான ஒரு பார்ட்டியின் பொழுது எடுக்கப் பட்டது என்று சொல்லப்படுகிறது.

அதிகம் படித்தவை:  சென்னை சாந்தி தியேட்டரை பற்றிய ஒரு தொகுப்பு!

சுகன்யா, குஷ்பு இருவரும் தங்கள் சினிமா கேரியரில் நடிப்பு, டான்ஸ், கவர்ச்சி என்று கலக்கியவர்கள் தான்.பின்னணியில் ஒலிக்கும் பழைய ஹிந்தி பாடல் ஒன்றிற்கு இவர்களை ஆடச் சொல்லி ஒருவர் அதை படம் பிடித்துள்ளார்.

மனோபாலா அவர்கள் ‘சும்மா சிலுப்புங்க ரெண்டு பேரும், சில்லறையை அள்ளுங்க, கம் ஆன் கேப் விடாம ஆடுங்க’ என்று சொல்வது தெளிவாக கேட்கிறது.

சுகன்யா ‘இதுக்கு எனக்கு அர்த்தம் என்ன என்று தெரியாது’ என்கிறார்.

அதிகம் படித்தவை:  தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா படத்திற்கு இசையமைக்க ரெடியாகும் மதுரைக்காரர் ஜஸ்டின் பிரபாகரன் - அவர் கடந்து வந்த பாதை !

குஷ்பூ  லிப்-சிங்க்குடன் நடனமாடுகிறார்.

இது சற்றே பழைய வீடியோ என்றாலும், தீடீரென்று தற்பொழுது மீண்டும் வைரலாகியுள்ளது. நம் நெட்டிசன்கள் “இது போதையில் போட்ட ஆட்டாமா இல்லை ஜாலிக்காக போட்ட டான்சா” என்று  பட்டிமன்றமே நடத்தி வருகின்றனர்.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்: சும்மாவா சொன்னாங்க முன்னோர்கள் ஆடின காலும் பாடின வாயும் எப்போதுமே சும்மா இருக்காது என்று. உங்கள் கருத்து என்னன்னு கமெண்டில் சொல்லுங்க, நமக்கும் வீக் எண்ட் டைம் பாஸ் ஆகணும்ல.