Sports | விளையாட்டு
ஆஸ்திரேலிய தொடரின் பாதியில் விலக உள்ள கேப்டன்.. சிக்கலில் சிக்கி தவிக்கும் இந்திய அணி!
ஐபிஎல் முடிந்தபின் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி கேப்டன் விராத் கோலி பாதியில் விலகுவார் என பரபரப்பு தகவல் கசிந்துள்ளது.
நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 போட்டிக்கு பின் அணியில் இருந்து விலகுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதனால், இந்திய டெஸ்ட் அணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய தொடர் உலக சாம்பியன்ஷிப் தொடரின் அங்கம் என்பதால் முதல் இரண்டு போட்டிகள் மிகவும் முக்கியம். அதில் வெற்றி பெற இந்திய அணி முழு பலத்துடன் களம் இறங்கும்.
இந்த நிலையில், இந்திய அணியில்இருந்து கோலி பாதியில் விலகுவார் என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது. கோலி தன் மனைவி அனுஷ்கா சர்மாவுடன் நேரத்தை செலவிடுவதற்கு இந்தியா திரும்புவதாக கூறுகின்றனர்.
மேலும் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா கார்ப்பமாக இருக்கிறார். அவர்களுக்கு ஜனவரி முதல் வாரத்தில் குழந்தை பிறக்கும் என கூறப்படுகிறது. அந்த சமயத்தில் மனைவியுடன் இருக்க வேண்டும் என விரும்புவார் என்பதால் அவர் அணியிலிருந்து விலகுவார் என கூறப்படுகிறது.
விராட் கோலி விலகினால் இந்திய அணியில் மாற்று வீரராக யாரை ஆட வைப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.

virat-kohli-ipl
