Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரத்தம் தெறிக்க தெறிக்க ரணகளமாக உருவாகும் கேஜிஎப்-2 climax.. இயக்குனர் பகிர்ந்த சூட்டிங் ஸ்பார்ட் புகைப்படம்
இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் கேஜிஎப் சாப்டர் 2. அனைவரும் கன்னட சினிமாவை ஏளனமாக பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் அதிரடியாக உருவாகி இந்திய சினிமாவையே அதிர வைத்த திரைப்படம்தான் கே ஜி எஃப்.
காட்சிக்கு காட்சி அதிரடி கலந்து மிரட்டி இருந்தார் இயக்குனர் பிரசாந்த் நீல். அதுமட்டுமில்லாமல் கன்னட நடிகர் யாஷ்க்கு கேஜிஎஃப் படத்தின் மூலம் இந்திய அளவில் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளங்கள் உருவானது குறிப்பிடத்தக்கது.
கேஜிஎப் சாப்டர் 1 பட வெற்றியைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தாறுமாறாக உருவாகி வருகிறது. மேலும் கே ஜி எஃப் 2 படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்க உள்ளார். இந்நேரம் படத்தின் வெற்றியை கொண்டாடி இருக்க வேண்டியது.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் கிட்டத்தட்ட பல மாதங்கள் படப்பிடிப்பு முடங்கியது. பிறகு விறுவிறுப்பாக தொடங்கப்பட்ட கே ஜி எஃப் 2 படத்தின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

kgf-2-clinax-shooting
கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிகள் படமாக்க உள்ளதாக படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் கே ஜி எஃப் 2 படத்தில் சண்டைக் காட்சிகளை அன்பறிவு என்ற இரட்டையர்கள் உருவாக்கி உள்ளனர்.

kgf-2-climax
கேஜிஎப் முதல் பாகத்திற்கு இவர்கள்தான். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ஆக்சன் படமான கைதி படத்திற்கும் இவர்தான் சண்டை பயிற்சியாளர் என்பது கூடுதல் தகவல். மேலும் கே ஜி எஃப் 2 படத்தின் டீசர் ஜனவரி 8ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது.
