ஹாலிவுட் ரேஞ்சுக்கு தயாராக உள்ள கேஜிஎஃப் 3.. எப்போது ரிலீஸ் தெரியுமா?

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கடந்த 2018ல் வெளியான கேஜிஎஃப் படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. வசூலிலும் வேட்டையாடிய நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் படக்குழு தயாரித்திருந்தது.

இந்நிலையில் கடந்த மாதம் கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. கன்னட மொழியில் உருவான இப்படம் மற்ற மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிடப்பட்டது. இப்படம் வெளியான எல்லா மொழியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

கிட்டத்தட்ட 1200 கோடி இப்படம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. கன்னட மொழியில் வெளியாகி இவ்வளவு வசூல் செய்த முதல் படம் என்ற பெருமையை கே ஜி எஃப் படம் பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் கே ஜி எஃப் படத்தின் மூன்றாம் பாகத்தைற்கான சூட்டிங் முதல் ரிலீஸ் வரை அப்டேட் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.

அதாவது தற்போது இயக்குனர் பிரசாந்த் நீல், சலார் படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 30 முதல் 35 சதவீதம் வரை முடிந்த நிலையில் இப்படம் முழுவதுமாக முடிந்தவுடன் அக்டோபர் மாதம் கேஜிஎஃப் 3 படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

மேலும் இப்படத்தை 2024 ஆம் ஆண்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார். MARVEL Universe போல வெவ்வேறு படங்களிலிருந்து வெவ்வேறு கதாபாத்திரங்களை கொண்டுவர முயற்சிக்கிறோம் என்று கூறியுள்ளார். இதனால் இப்படம் வேற லெவல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பாலிவுட்டில் வெளியான அவெஞ்சர்ஸ் படத்தைப் போல கேஜிஎஃப் படமும் தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்கள் உருவாக உள்ளதாக இப்படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார். இதனால் கேஜிஎஃப் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.

Next Story

- Advertisement -