Tamil Cinema News | சினிமா செய்திகள்
நெல்சனுக்கு பயத்தை காட்டிய கேஜிஎப் 2 பட டிரைலர்.. இணையத்தை மிரட்டும் ராக்கிங் யாஷ்
கன்னட சினிமாவில் மிக பிரமாண்டமாக வெளியாகி அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் கேஜிஎப் சாப்டர் ஒன்.
கன்னட நடிகர் யாஷ் கேஜிஎஃப் படத்திற்கு பிறகு தற்போது இந்தியா மட்டுமின்றி அனைத்து நாடுகளிலும் ரசிகர் பட்டாளத்தை குவித்து வருகிறார். கேஜிஎப் சாப்டர் 2 படத்திற்கு இந்தியா முழுவதும் பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதற்கு ஏற்றார்போல் படத்தில் நடிகர் நடிகைகளின் தேர்வுகளில் இந்திய அளவில் பிரபலமான நடிகர்களை தேர்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் கேஜிஎப் சாப்டர் ஒன் படத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கேரக்டர் ஆதிரா.
கேஜிஎப் சாப்டர் 2 படத்தில் ஆதிரா கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார். இந்நிலையில் மிருகத்தனமான கதாபாத்திரமாக அவருக்கு கிடைத்துள்ளதாம்.
தற்போது இணையதளத்தில் கே ஜி எஃப்-2 டிரைலர் வெளியாகி பட்டையை கிளப்பிக் வருகிறது. ஜான் கொக்கன் மற்றும் பிரகாஷ்ராஜ் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவதால், பீஸ்ட் படத்திற்கு இந்த அளவு மாஸ் கிடைக்குமா என்று நெல்சன் பயத்தில் இருக்கிறார்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
