சனியனிடமிருந்து தப்பித்து சாத்தானிடம் மாட்டிய கே ஜி எஃப் 2.. படத்துக்கான மரியாதை போய்விடுமே!

கன்னட சினிமா ஒன்று இருக்கிறதா என்று அனைவரும் கேலி கிண்டல்கள் செய்து கொண்டிருந்த நேரத்தில்தான் தடாலென வெளியாகி தாறுமாறு வெற்றியை பெற்று இந்திய அளவில் கன்னட சினிமாவை தலை நிமிரச் செய்தது கேஜிஎப் திரைப்படம்.

கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் அதிரடி படமாக வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. படம் வெளியான போது தியேட்டரில் சென்று பார்க்காத தமிழ் ரசிகர்கள் அதன்பிறகு டவுன்லோட் செய்து பார்த்தனர்.

மேலும் இந்த படத்தின் வசனங்களும் காட்சிகளும் ஏகப்பட்ட மீம்ஸ் மெட்டீரியலாக மாறியது. முதல் பாகம் சுமார் 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த நிலையில் இரண்டாவது பாகத்திற்கு ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

கடந்த ஜூலை 16ஆம் தேதியே இப்படம் வெளியாக வேண்டியது. ஆனால் உலகம் முழுவதும் தியேட்டர்கள் திறப்பதில் ஏகப்பட்ட சிக்கல்கள் இன்னமும் நிலவி வருவதால் படக்குழு ரிலீஸ் தேதியை முடிவு செய்ய முடியாமல் தடுமாறி வருகிறது.

இருந்தாலும் ரசிகர்களுக்கு ஏதாவது ஒரு அப்டேட் கொடுத்துதானே ஆகவேண்டும். அந்த வகையில் இந்த முறை கே ஜி எஃப் 2 படத்தின் மொத்த சேட்டிலைட் உரிமைகளையும் அனைத்து மொழிகளிலும் உள்ள ஜீ நிறுவனம் கைப்பற்றியுள்ளதை தெரிவித்துள்ளனர். தமிழில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இந்த படம் ஒளிபரப்பாக உள்ளது.

kgf-2-satellite-rights-bagged-by-zee
kgf-2-satellite-rights-bagged-by-zee

ஏற்கனவே கலர்ஸ் தொலைக்காட்சியில் கேஜிஎப் படத்தை வாரத்திற்கு மூன்று முறை ஒளிபரப்பி வருகின்றனர். அதேபோல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் போட்ட படத்தையே திரும்ப திரும்ப போட்டு வருகின்றனர். இதனால் கே ஜி எஃப் 2 படத்திற்கான மரியாதை போய்விடுமே என கவலைப்படுகின்றனர் நம் ரசிகர்கள். மேலும் இந்த மாதிரி படங்களை ஏன் சன் டிவி நிறுவனம் வாங்குவதில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்