கே.ஜி.எப் ராக்கி பாய்க்கு இவ்வளவு அழகான மனைவியா? வைரலாகும் செல்பி புகைப்படம்

கடந்த ஆண்டு வெளிவந்து இந்திய சினிமாவையே புரட்டிப்போட்ட திரைப்படம் கேஜிஎப். கன்னடம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியான இந்த திரைப்படம் வசூலில் 100 கோடியையும் தாண்டி புதிய சாதனை படத்தைத்தது.

இதன் மூலம் கன்னட திரைப்பட வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையையும் இந்த திரைப்படம் படைத்தது.

இந்த படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்  யாஷ். இதன் மூலம் இவருக்கு ராக்கிங் ஸ்டார் என்ற பட்டமும் கிடைத்தது. இவர் 2016 ஆம் ஆண்டே கன்னட திரையுலகில் அறிமுகமானாலும் இந்த திரைப்படம் இவரை புகழின் உச்சத்துக்கே கொண்டு சென்றது.

இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தின் இரண்டாம் பக்கம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தின் கதாநாயகரான யாஷுக்கு  2016 ஆம் ஆண்டு தான் திருமணமானது. இவர் ராதிகா பண்டித் என்ற பிரபல நடிகையை திருமணம் செய்துகொண்டார்.

இவரது மனைவிக்கு யாஷை விட இரண்டு வயது அதிகம். இவர்களுக்கு கடந்த ஆண்டு தான் அழகான பெண் குழந்தை ஒன்றும் பிறந்தது. அந்த குழந்தைக்கு இவர்கள் ஆர்யா யாஷ் எனவும் இவர்கள் பெயரிட்டுள்ளனர்.

yash-kgf
yash-kgf

Leave a Comment