fbpx
Connect with us

யஷ் நடிப்பில் கே ஜி எப் படத்தின் “தீரா தீரா” பாடல் லிரிக்கல் வீடியோ.

Videos | வீடியோக்கள்

யஷ் நடிப்பில் கே ஜி எப் படத்தின் “தீரா தீரா” பாடல் லிரிக்கல் வீடியோ.

Kolar Gold Fields : Chapter 1

டிசம்பர் 21ஆம் தேதி வெளிவரும் படம் கே.ஜி.எப் அத்தியாயம் 1. இது கே.ஜி.எப் என்ற கோலார் தங்க வயலின் பின்னனியை கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம். இந்த படம் கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.

யஷ், ஸ்ரீநிதிஷைட்டி, அனந்த் நாக், மாளவிகா ஆகியோறது நடிப்பில் அன்பறிவு சண்டை இயக்கத்தில், ஸ்ரீகாந்த் படதொகுப்பில், கே.ஜீ.ஆர் அசோக் வசனத்தில், புவன்கவுடா ஒளிப்பதிவில், ரவி பசூரூர் இசையில், பிரசாத் நீல் இயக்கத்தில் ஹொம்பாலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தர் தாயாரிப்பில் கே.ஜீ.எப் படம் உருவாகியுள்ளது. ரூ.80 கோடி செலவில் தயாரித்துள்ளனர். கே.ஜி.எப் படத்தை வாங்கி தமிழகம் முழுவதும் நடிகர் விஷால் வெளியிடுகிறார்.

kgf

KGF

70 இறுதி மற்றும் 80 தொடக்கங்களில் கே.ஜி.எப்-ல் கிடைக்கும் தங்கத்தால் அவ்விடத்தை கைப்பற்ற மாஃபியாக்கள் இடையே பெரிய போட்டி நடந்தது. அரசியல் தலைவர்கள், பன்னாட்டு நிறுவன முதலைகள், மற்றும் மாஃபியாக்கள் இடையே நடந்த போட்டியில் எந்த பின்புலமின்றி விஷ்வரூபம் எடுத்த ராக்கி பற்றிய கதை இப்படம்.

எழுபதுகளின் இறுதி என்பதுகளின் தொடக்கத்தில் கதை நடப்பதால் பிளாக் மற்றும் பிரௌன் கலர்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. தங்கச்சுரங்கத்தின் அரங்க அமைப்புகள் கோலார் தங்க வயலில் போடப்பட்டு புகை, புழுதி மற்றும் நெருப்புகளுக்கு இடையே 8 மாதங்கள் 4 ஆயிரம் துணை நடிகர்களுடன் படமாக்கப்பட்டது இப்படம்.

KGF-KGF-

இப்படத்தின் பாடல் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Videos | வீடியோக்கள்

Advertisement

Trending

To Top